posco act

13 0 0
                                    

வணக்கம் நண்பர்களே...

இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த இதை நான் இங்கு பதிவு செய்யவில்லை, ஒரு வழக்கறிஞராக குழந்தைகளின் நலனை முன்னிட்டு, பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க மட்டுமே இந்த பதிவை போடுகிறேன், இப்பதிவில் வரும் பதங்கள் தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள்.

நன்றி.

போஸ்கோ சட்டம்:

இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(posco) Act 2012).

இந்த சட்டம் சுருக்கமாக போஸ்கோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14 தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

சட்டத்தின் பொது அம்சங்கள்:

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.

இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும்.

சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்Where stories live. Discover now