அவனவள் 4

666 47 14
                                    

அவ(ன்)ள்4

அஞ்சலியின் மென் இதழ்கள் சத்தமின்றி உச்சரித்த பெயருக்கு சொந்தமானவளோ தமையனின் வரவை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.

கிருஷ்ணாவை விட்டு வேகமாக சென்று பிருந்தாவின் முன் நின்ற அஞ்சலி "ஹேய் நீ... பிந்து பிந்து அப்பளம்... தானே..." என்று கேட்டதும்

அஞ்சலியை கண்டுக் கொண்ட பிருந்தாவின் கண்கள் பளிச்சிட "ஹேய் அஞ்சு நீ.. நீ ... இங்கதான் இருக்கியா..." என்று பல வருடங்கள் கழித்து சந்திக்கும் தன் தோழியை அன்புடன் கட்டிக் கொண்டாள் பிருந்தா...

"ஆமா பிந்து... நான் இங்க தான் வொர்க் பண்றேன்... நீ என்ன பண்ற...? எப்படி இருக்க...? இங்க என்ன பண்ற?" என்று அடுக்கடுக்காக பல கேள்விகளுடன் பிருந்தாவை விசாரித்தாள் அஞ்சலி.

தன் வாழ்க்கையை நினைத்ததும் உதட்டில் ஊடுருவிய வறட்டு புன்னகையுடன் "நல்லா இருக்கேன் அஞ்சு... அம்மாவுக்கு தான் உடம்புக்கு முடியலை ... இங்க தான் சேர்த்து இருக்கேன்..." என்று வருத்தமாக கூறியவள் "நீ எப்படி இருக்க அஞ்சு?..." என்றாள்.

அதற்குள் அவர்களை சமீபித்திருந்த கிருஷ்ணா இருவரும் பேசுவதை பார்த்து விழிகள் வினா தொடுக்க

"அஞ்சலி உனக்கு இவங்கள முன்னாடியே தெரியுமா?" என்றான்.

அஞ்சலியின் இதழ்கள் சிரிப்பில் நெளிய "இவ என் ஸ்கூல் மேட் கிருஷ்ணா... ப்ளஸ் டூ வரையும் ஒன்னாதான் படிச்சோம்.... இடையில் சில வருஷங்கள் காண்டாக்ட்ல இல்ல" என்று அவனிடம் தங்களை பற்றி விவரித்தவள்

"இத்தனை வருஷம் கழிச்சி இன்னைக்கு உன்னை இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல பிந்து டியர்... ரியலி சர்பிரைஸ் டா" என்றாள் வியப்பும், சிரிப்புமாய்...

"ஓகே.. ஓகே... பிரெண்டை பார்த்ததும் ஓவர் எக்ஸைட்டடா இருக்கன்னு தெரியுது... பாவம் அவங்களையும் கொஞ்சம் பேச விடு அஞ்சலி..." என்று தோழியை கிண்டல் செய்தவன்... "பேசிட்டு இருங்க நான் பேஷண்டை பார்த்துட்டு வந்துடுறேன்" என்று கூறிவிட்டு ஐசியூ அறையினுள் சென்றான்.

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now