அவனவள் 10

551 30 21
                                    

அவ(ன்)ள் 10

வெண் பஞ்சுபொதி மேகங்களுக்கு இடையே புகுந்த, பறவையை போல தன் இயந்திர  சிறகை விறித்து பறந்த விமானத்தில் தடதடக்கும் மனதுடன், மஞ்சள் தாலி சரடு மார்பில் உறவாட கண்கள் இரண்டும் கலங்கியபடி   பிரகாஷின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் பிருந்தா…

"பிருந்தா அர் யூ ஓகே…" என்ற பிரகாஷின் கேள்வியில் "ம்"  என்று தலை அசைத்தவள் கண்களை இறுக்க முடிக்கொண்டாள். பிராகஷிடம் பேசவோ ,கேட்கவோ அவளின் மனநிலை இல்லாததால்  தூங்குவது போல இருந்தாள்.

இரு நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் முடிந்திருக்க மும்பையை நோக்கி தம்பதியர் இருவரும் சென்றுக்கொண்டிருந்தனர்.  

அன்று பரசு கேட்ட வார்த்தைகள் இன்று வரை அவளை ஊசியாய் உறுத்திக் கொண்டிருக்க அந்நாளைய நிகழ்விற்கு சென்றாள் பிருந்தா.

தேர்வு முடிந்து மகிழ்வுடன் திரும்பியவளை "என்ன எல்லாம் பேசி முடிச்சிட்டு வந்துட்டியா? எப்போ இழுத்துக்கிட்டு ஓடப்போற?" என்ற  தந்தையின் இறுகிய குரலில் ஸ்தம்பித்து நின்றவள் அடுத்த நிமிடமே "என்னப்பா என்ன கேக்குறிங்க?" என்றாள் நீரில் பளபளத்த விழிகளோடு.

"என்ன  புரியாத மாதிரி நடிக்கிறியா?" என்று பற்களை நறநறத்தவர்  "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா கண்டவன் கூட ரோட்டுல ஜோடியா நின்னு பேசிட்டு வருவ... இதுதானா நீ படிச்சி கிழிச்ச லட்சணம்... ரோட்டுல ஆயிரம் பேர் முன்னாடி என் மானத்தை வாங்கிட்டியே ஓடுகாலி கழுதை" என்றதும்

"என்னங்க கொஞ்சம் நிதானமா கேளுங்க.." என்ற மகேஷ்வரியின் சொற்களோ இல்லை "அப்பா ப்ளீஸ் பா" என்ற விஷ்ணுவின் பேச்சோ எதுவும் காதில் வாங்காமல் மகளை வார்த்தைகளால் குத்தி கிழித்தார் பரசு.

இருவரின் உரத்த குரலில் தன்னிலை உணர்ந்து  "அப்பா" என்று அலறியவள் "என்ன நடந்ததுன்னே தெரியாம இப்படி கேக்குறிங்க??? அப்படியே பேசி இருந்தாலும் அதுல என்ன தப்பை கண்டுபிடிச்சிங்க" என்றாள் கோவமோ ஆதங்கமோ ஏதோ ஒன்று அவள் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது.

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now