அவனவள்8

629 35 23
                                    

அவ(ன்) 8

உஞ்சலில் பேப்பரும் கையுமாக அமர்ந்திருந்த வாசனிடம் மேல் மூச்சி கீழ் மூச்சு வாங்க பேசிக்கொண்டு இல்லை இல்லை என்று கத்திக் கொண்டு இருந்தார் பர்வதம்.

நீ சொல்வது எதுவும் என் காதில் விழவில்லை என்ற ரீதியில் அமைதியாக இருந்த வாசன் அன்றைய செய்திதாளில் முக்கிய செய்திகளை புரட்டிக் கொண்டிருந்தார்.

"நான் இங்க ஒருத்தி தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன்... நீங்க, செவிடன் காதுல ஊதினா சங்கு மாதிரி அமைதியா இருக்கிங்களே" என்று கோபத்தில் அவர் கரங்களில் இருந்த செய்திதாளை வீசி எறிந்தார் பர்வதம்...

பர்வதத்தின் செயல் வாசனுக்கு கோபத்தை உண்டாக்க  "சே… என்னைக்காவது மனுஷன நிம்மதியா இருக்கா விடுறியாடி.. எப்போ பார்த்தாலும் லோலோன்னு கத்திட்டு இருக்க வேண்டியது... இப்போ என்னடி உன் புள்ளைக்கிட்ட இந்த வீட்டை தூக்கி கொடுத்திட்டு நாம நடுத்தெருவுல நிக்கனும் அதானே உன் ஆசை…"  என்று கோவமாக ஊஞ்சலில் இருந்து எழுந்தார்.

கணவர் தன்னை எதிர்த்து பேசவும் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்ற பர்வதம் அடுத்த நொடியே தன்னை சமாளித்து 

"என்னைக்கு நீங்க அவன் மேல நம்பிக்கைய வைச்சி இருக்கிங்க உங்க தம்பி புள்ளைங்க மேல வைச்ச பாசத்தை கூட என் புள்ளைங்க மேல வைக்கலையே…" என்று வாயை பொத்தி அழுவது போல் பேசி வாசனின் கவனத்தை மகன் மேல் திருப்ப முயன்றார் .

"போதும் நிறுத்து பர்வதம் உன் நாடகத்தை… நீ பேசி பேசி அந்த புள்ளையோட வாழ்க்கையே போச்சி இன்னும் உன் கண்ணுக்கு என்ன உருத்திக்கிட்டே இருக்கு" என்றார் சற்றே கோவமாக 

வாசன் பர்வதம் தம்பதியருக்கு ஒரு மகள் ஒரு மகன் மூத்தவள் ராகினிக்கு பக்கத்தூரில் கொஞ்சம் பெரிய இடத்தில் திருமணம் முடித்திருக்க,  இளைய மகன் தினேஷின் நடவடிக்கைகள் அவ்வளவாக சொல்லிக் கொள்வது போல் இல்லாமல் இருந்தது. ஒரு தொழிலை தொடங்கி கொடுத்தால் உருப்படுவான் என்ற நினைப்பில் வீட்டை அல்லது கடையை வைத்து பணம் தருமாறு கணவரிடம் நச்சரித்துக் கொண்டிருந்தார் பர்வதம்.

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now