அவனவள்9

582 32 10
                                    

அவ(ன்)ள் 9

மஞ்சள் நிற மின் விளக்குகள் எங்கும் தங்கமாய் மினுமினுக்க மெல்லிய இசை காற்றில் மிதந்து காதை வருடியது அந்த ரெஸ்டாரன்டில். பிருந்தாவும் அஞ்சலியும் அமர்ந்திருக்க.

சர்வர் வந்து ஆர்டர் கேட்கவும் இன்னும் 5 நிமிடத்தில் ஆர்டர் தருவதாக கூறியவர்கள் கிருஷ்ணாவின் வருகைக்காக காத்திருந்தனர்.

பிருந்தா வேலைக்கு சென்று ஒரு வாரம் கடந்திருக்க அன்று கிருஷ்ணா கேட்டுக் கொண்டதற்காக இன்று இருவரையும் ரெஸ்ரண்ட்க்கு அழைத்திருந்தாள் பிருந்தா.

சிறுவயது கதைகளை பேசியபடி இருந்தவர்கள் தங்களை பற்றி பகிர்ந்துக்கொள்ளவும் அதுவரை சிரித்த முகமாக இருந்த அஞ்சலியின் முகம் கனலாக மாறியது. 

"அவனை சும்மாவா விட்ட பிந்து லெட்ப் அன்ட் ரைட் வாங்கி லாக்கப்ல தள்ளி இருக்க வேண்டாமா?" என்று கோவப்பட

அவள் சத்தமிட்டதில் சிலர் திரும்பி பார்க்கவும் "ஹேய் எல்லாரும் பாக்குறாங்க அஞ்சு…" என்று அவளை அமைதி படுத்திய பிருந்தா "அவனே வேண்டாம்னு வந்துட்டதுக்கு அப்புறம் இதுவெல்லாம் எதுக்கு, தேவையில்லாத ஆணிதானே "  என்றாள் அழகான புன்னகையுடன்.

"உன்னால எப்படி பிந்து இப்படி நார்மலா இருக்க முடியுது…? எனக்கு கொதிக்குதுடி உன் பெரியம்மாவயோ இல்ல அப்பாவையோ  பாத்தா நாக்கை பிடிங்குக்குறா மாதிரி கேள்வி கேட்பேன்" என்றாள் காட்டமாக

"பச் விடு அஞ்சு… அதெல்லாம் நினைக்க கூட பிடிக்காத விஷயம்" என்று கூறியபடி திரும்பி பார்க்க தூரத்தில் கிருஷ்ணா வருவது தெரிந்தது.

 "ஹேய் அங்க பாரு கிருஷ்ணா வந்துட்டாங்க... முகத்தை நார்மலா வைச்சிக்க ப்ளீஸ ப்ளீஸ் விஷயம் எதுவும் தெரிய வேண்டாம்"  என்று பிருந்தா அவள் கைகளில் அழுத்தம் கொடுக்க,  

"என் முகத்தை பார்த்தாலே கண்டு பிடிச்சிடுவான்.. நான் பேஷ் வாஷ் பண்ணிட்டு வறேன்" என்று அஞ்சலி கழிவரை சென்றாள்.

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now