அவனவள் 6

662 38 33
                                    


அவ(ன்)ள் 6

இரு கைகளிலும் தலையை தாங்கி பிடித்தபடி தனது அறையில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணா… இருநாட்களாக அவனது முகமே சரியில்லை…. காலை மருத்துவமனைக்கு  வந்ததிலிருந்து ஏதோ ஒரு நுண்ணுணர்வு அவனை தாக்கியபடி இருக்க… இதழில் எப்போதும் இருக்கும் இளநகை துணி கொண்டு துடைத்தார் போன்று தூரப் போயிருந்தது… 

கதவு தட்டும் சத்தம் கேட்டு "எஸ்" என்றான்.

உள்ளே வந்த செவிலியர் "டாக்டர் ரவுண்ட்ஸ்க்கு நேரமாகிடுச்சி" என்று நினைவுப்படுத்தவும் வாட்சை திருப்பி பார்த்து  "சரி" என்று கூறிவிட்டு ஸ்டெதஸ்கோப்புடன் இதயநோய் பிரிவிற்குள் நுழைந்தவன், தன் சோதனையை முடித்து வெளி வந்து  ஐசியூவிற்குள் நுழைந்தான்.

தூரத்தில் வரும் போதே தன்னிச்சையாக கிருஷ்ணாவின் கண்கள் பிருந்தாவை தேடியது.  ஐசியூ வாயிலில் அவள்  அமர்ந்திருப்பதை போல தோன்றவும் கண்கள் பளிச்சிட" நர்ஸ் பிருந்தாவோட அம்மா மறுபடி அட்மிட் ஆகி இருக்காங்களா?" என்று அவளை நோக்கி வேகமாக நடந்தான்.

அவனுடன் வந்த செவிலியர் "இல்லையே டாக்டர்… இரண்டு நாளைக்கு முன்னாடி தானே, அவங்க டிஸ்சார்ஜ் ஆகி போனாங்க…  இதோட நெக்ஸ்ட் வீக் செக்கப்க்குதான் வருவாங்க டாக்டர்… இப்போ ஐசியூல இருக்க… பேஷண்ட் ஜென்ஸ்... நேம் சங்கர்…"  

என்றதும், சட்டென கிருஷ்ணாவின் நடை தடைபட்டு நின்றிறது 

"டாக்டர்"… என்ற செவிலியரின் அழைப்பில் தன்னிலை உணர்ந்தவன் "ம் வாங்க" என்றவன் ஐசியுவிற்கு சென்றுவிட்டு அறைக்கு வந்தான்.

கிருஷ்ணாவிற்கு  காணும் இடமெல்லாம் பிருந்தா இருப்பதை போன்ற ஒரு பிம்பம் தோன்றவும்

மூச்சை உள்ளிழுத்து வேகமாக வெளியேற்றியவன் தலையை உலுக்கி கொண்டான். தன் கண்களும் மனமும் பிருந்தாவை தேடுகிறது என்ற உண்மை புரிய சிலநாட்களுக்கு முன்பு நண்பர்கள் கேட்ட கேள்வி மூளையை அரித்திட

அந்நாள் நினைவில் வந்தது.

"அப்புறம் மச்சன் முகமெல்லாம் பிரகாசமா இருக்கு!!!"… என்று கிரி கிருஷ்ணாவை பார்த்தான். 

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now