அவனவள் 25

1.1K 41 47
                                    

இரவின் குளுமையில்  நிலவு மங்கையின் வரவுதனில்  அந்த இடமே ரம்யமாய் காட்சி அளித்தது. ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தெரிந்த கரு நிற வானில் அங்காங்கே  வைரங்களாய் மின்னும் நட்சத்திர சிதறல்களின் மேல் பார்வையை பதிந்திருந்தாள் பாவை….  தான் எடுத்த முடிவு சரியா தவறா என்ற குழப்பத்தை விட அவன் ஏற்றுக்கெள்வானா என்ற தவிப்பே அவளை அலைகழித்து கொண்டிருந்தது.

இரு நாட்களாக அழுது வீங்கிய கண்கள் எனக்கு கொஞ்சம் ஓய்வை கொடேன் என கெஞ்சியது. அதை எல்லாம்  கருத்தில் கொள்ளாது யோசனை படிந்த முகத்துடன்  நிலவுமங்கைக்கு ஈடாக போட்டியிட்டு நின்றிருந்தாள் கிருஷ்ணாவின் பிருந்தா…

கதவு பலமாக  தட்டும்  ஒலியில் யோசனை களைந்த பிருந்தா மணியை பார்க்க இரவு ஒன்பதை நெருங்கி இருந்தது…

இன்னும் விஷ்ணு வீட்டிற்கு வந்தபாடில்லை வாசனின் வற்புறத்தலுக்கு இணங்க தினமும் இரண்டு மணி நேரம் அரிசி மண்டியில் கணக்கு வழக்கை பார்த்து விட்டு 9 அல்லது 9.30 மணியை போல் வீட்டிற்கு  வர, இன்றும் அதே போல் நேரமாகி இருக்க மனதில் உள்ள கலக்கத்தை எல்லாம் ஓரங்கட்டியவள். விடாமல் தொடர்ந்து கதவு தட்டியடி இருக்கவும் "இரு விஷ்ணு இதோ வந்துட்டேன்" என்று குரல் கொடுத்தபடியே கதவை திறந்தவளுக்கு  அதிர்வில் கண்கள் இரண்டும் சாசரை போல் விரிந்து இதயம் தாளம் தப்பி அடித்துக் கொண்டது.

அழுது அழுது மூக்கு சிவந்து கண்இமைகள் தடித்து கன்னங்கள் வீங்கி முகம் வாட, ஏனோதானோவென்று நின்றிருந்தாவளை பார்த்தவனுக்கு அவளை அனைத்து ஆறுதல் கூற இதயம் துடித்து கைகள்‌ பரபரத்தது.  அவளுக்காக துடித்த தன் மனதை  கட்டுப்படுத்திக் கொண்ட கிருஷ்ணா, கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக காட்டி அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.

எப்போதும் இதழில் குடிக்கொண்டிருக்கும்  புன்னகை சிறிதும் இன்றி கண்களில் கனிவான பார்வைக்கு பதில் ஆளை துளைக்கும் பார்வையுடன் நின்றிருந்தவனை கண்டவளுக்கு சப்தநாடியும் ஆட்டம் கண்டது… 

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now