அவனவள் 19

529 34 32
                                    

அவ(ன்)ள் 19

பிருந்தா பேசிய அனைத்தையும் அலைபேசி வழியாக கேட்ட கிருஷ்ணாவிற்கு மனதே பாரமாகி போனது….

உனக்கு என் மேல நம்பிக்கையே இல்லையா பிருந்தா … இல்ல என்னை பத்தி இவ்வளவு தான் தெரிஞ்சி வைச்சிருக்கியா... உன் கண்ணுக்கு அப்படி தான் நான் இதுவரை தெரிஞ்சி இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு பிருந்தா … என்று மானதோடு அவளிடம் வருத்தமாக பேசியவன் அப்படியே சோர்ந்து தலையை பிடித்துக்கொண்டான்.

என்னடா கிளம்பளையா என்று கிருஷ்ணாவின் அறைக்குள் நுழைந்தான் கிரி.

கிளம்பனும் என்றவனுக்கு முகம் சோர்ந்து போய் இருக்க… என்ன கிருஷ்ணா உடம்பு சரியில்லையா என்று கிரி கிருஷ்ணாவின் நெற்றியை தொட்டு பார்த்தான்.

பச் அதெல்லாம் ஒன்னும் இல்ல நல்லாதான் இருக்கேன் என்று அவன் கரங்களை தட்டி விட்ட கிருஷ்ணா நீ கிளம்பளையா இன்னும் நீ இங்க என பண்ற என்றான் கேள்வியாய். ஏனோ இதை கிரியிடம் கூற அவனுக்கு சற்றும் விருப்பமில்லை எப்போதும் போலவே முகத்தை சாதரணமாகவே வைத்துக்கொண்டான்.

இதோ கிளம்பிட்டேன் டா ஒரு டெலிவரி கேஸ் பேபிய செக் பண்ணிட்டு அப்சர்வேஷன்ல வைக்க சொல்லிட்டு வந்தேன் அதான் லேட் சரி வா போகலாம் என்றிட இருவரும் அறையை விட்டுவெளியே வந்தனர். கிருஷ்ணாவிற்கு மட்டும் பிருந்தாவின் யோசனையே அவளுடைய குழப்பங்களையும் மனக்காயங்களையும் எப்படியாவது அகற்றி விட வேண்டும் என்று மனது பரபரத்தது. அதற்குள் கிரிக்கு அழைப்பு வர நீ போயிட்டு இரு மாப்ள இதோ வந்துடுறேன் என்றவன் திரும்பி  குழந்தைகள் வார்டை நோக்கி  நடந்தான்.

"இது அக்ஸிடென்ட் மாதிரி தெரியல... சூசைட் அட்டம்ட்டு மாதிரி தெரியுது" என்று தங்களுக்குள் பேசிக்கொண்ட மருத்துவர்கள் வெளியே நின்றிருந்த பிருந்தாவிடம் "ஹெவி பிளட் லாஸ் ஆகியிருக்கு…எங்க கிட்ட இந்த பிளட் குருப் ஸ்டாக் இல்ல..

 பிளட் பாங்குல இன்பார்ம் பண்ணி இருக்கோம்... ஆனா பேஷண்டுக்கு உடனே பிளட் தேவைப்படுது… உங்கள்ள  யாருக்காவது A1 B+ பிளட் குருப் இருக்கா?" என்று வினவியதும்

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now