அவனவள்18

523 33 14
                                    

அவ(ன்)ள் 18

கடந்த இரு நாட்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நாட்கள் செல்ல மகேஷ்வரிக்கு இரவு  உணவை எடுத்துக் கொண்டு வந்தாள் பிருந்தா.

"அம்மா சாப்பிடுங்க"

"நான் சாப்பிட்டுக்குறேன் பிருந்தா...நீ வச்சிட்டு போய், உன் வேலைய பாரு" என்றார் மகேஷ்வரி உணவினை கையில் தொடாமல்…

" சாப்பிடுங்கம்மா நேத்தும் நான் வைச்சிட்டு போன சாப்பாடு அப்படியே இருந்தது… மாத்திரை போடுறிங்க சாப்பிடும்னு தெரியாதா உங்களுக்கு" என்று பிருந்தா அவரை கடிந்துக் கொள்ள

"வாழனும்னு ஆசை இருக்கவங்களுக்கு தானே சாப்பாடு மாத்திரை மருந்து எல்லாம் தேவைப்படும்... எனக்கு தான் அந்த ஆசையே இல்லையே... நான் எதுக்கு இதையெல்லாம் எடுத்துக்கனும்" என்று எங்கோ பார்த்து கூறிட

கோபத்துடன் எழுந்தவள் "இப்போ என்ன உண்ணா விரதம் இருக்கிங்களா…?  நீங்க மட்டும் தானா இல்ல குடும்பமே இருக்கா…"  என்று நக்கலாக கேட்டவள் "உங்க எல்லாருக்கும்  நீங்க நினைச்சது நடக்கனும்... அதுக்கு என்னவேணா பண்ணுவிங்கல்ல…  என் மனசை யாரும் பாக்க மாட்டிங்க... இப்போ என்ன நான் இந்த கல்யாணம் பண்ணிக்கனும்... அவ்வளவு தானே… சரி நான் இந்த கல்யாணத்துக்கு  சம்மதிக்கிறேன் போதுமா …" என்று பிருந்தா கூறியதும்  மகேஷ்வரி ஆனந்த அதிர்வுடன் கண்களில் நீர் திரள மகளையே பார்த்தார்..

  "உங்க இஷ்டப்படியே என்னவேணா செய்யுங்க... நான் எதுவும் கேட்க மாட்டேன்…" என்றவள் தாயின் கைகளில் உணவினை திணித்து விட்டு "சாப்பிடுங்க இதுல மாத்திரை இருக்கு போடுங்க" என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேற,

"பிருந்தா…" என்மேல கோவம் என்று மகேஷ்வரி பேச ஆரம்பிக்க "எனக்கு யார்மேலையும் கோவமில்லை  முழு மனசோடதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்… அவங்க வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க" என்று கூறியவள் அங்கிருந்து சென்று விட்டாள்…

….

ஐந்துஆறு நாட்களாக அவளை காண வேண்டும் என்று தவம் கிடக்கும் கிருஷ்ணாவிற்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாள் பிருந்தா.. அவள்  சம்மதம் சொல்லிய நாளிலிருந்து போன் செய்தாலும் எடுக்காமல் மெசேஜிலும் பதில் தராமல் அவனை சுற்றலில் விட்டுக் கொண்டிருந்தாள்.

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now