அவனவள்14

530 33 23
                                    

அவ(ன்)ள் 14

கோபம் எனும் ஆழிப்பேரலையில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா , மூச்சை சீராக இழுத்து விட்டு தன்னை சமன்படுத்தி வேலையில் ஈடுபட முயன்றாள்..

கிருஷ்ணா தன் காதலை சொல்லி ஒரு வாரம் கடந்திருந்தது...   அவன் மேல் கடுங்கோபத்தில் இருந்தாள். இன்னுமே அவன் கூறிய வார்த்தைகளை அவளால் ஜீரணிக்க முடியவில்லை… கிருஷ்ணா போன் செய்தாலும் எடுக்காமல் அவனை தவிர்த்தாள்.. நான் பிரெண்டா தானே பழகினேன்.. நானும் அவனுக்கு அஞ்சலி மாதிரி தானே!! என்கிட்ட எப்படி கல்யாணம் பண்ணிக்க சொல்லி  கேக்கலாம்... என்று அவனை வறு சட்டியில் மட்டும் தான் போடவில்லை மற்றபடி வறு வறு என்று வார்த்தைகளால் வறுத்துக் கொண்டிருந்தாள். 

அன்று கிருஷ்ணா காதலை சொல்லிய தினத்தில் நடந்தது கண் முன் விரிந்தது. அவன் கூறிய வார்த்தைகளை கிரகிக்க முடியாமல் உறைந்தவள் இருக்கும் இடம் உணர்ந்து "என்ன சொன்னிங்க?? புரியல!?!"  என்றாள் தன்னை தெளிவித்துக் கொள்ள

"…‌ புரியலையா!!…  சரி இப்போ தெளிவாகவே கேக்குறேன்... என்னை கல்யாணம் பண்ணிக்க‌ உனக்கு சம்மதமா?" என நிறுத்தி நிதானமாக கேட்டவன் சற்றும் படபடப்பின்றி அவளை பார்த்தான் …

கோபத்தின் உச்சியில் இருந்தவள் கண்களை இறுக்க மூடி முயன்று தன்னை கட்டுபடுத்தி "சாரி கிருஷ்ணா... இதை உங்க கிட்ட‌ இருந்து  நான்‌ எதிர்ப்பார்க்கல!" என்று காட்டமாக உரைத்தவள் அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டாள்… இருந்திருந்தால் அவன் மீது என்னென்ன பறந்திருக்குமோ  அதற்காகவே அங்கிருந்து சென்று விட்டாள்.

இப்போதும் அதை நினைக்க நினைக்க கோபமாய் வந்தது சே… "ஒரு வேலைய கூட உருப்படியை செய்ய முடியல…". என்று நொந்தவளை யாரோ பார்க்க வந்திருப்பதாக வாட்ச்மேன் உரைத்து சென்றிருக்க 'யாராக இருக்கும்‌' என்று எண்ணியபடி ரிசப்ஷனை நோக்கி சென்றாள்.

அங்கு கிருஷ்ணாவை  கண்டதும் பிருந்தாவின் கண்கள் அவளையும் அறியாமல் பளபளப்பை பெற்றிட இதயம் பல மடங்கு வேகமாக துடிக்க  ஆரம்பித்து விட்டது. 'ரொம்ப கூலாக இருக்காரு... லவ்வையும் சொல்லிட்டு எவ்வளவு தைரியம் இருந்தா வேலை செய்ற இடத்துக்கே வந்து நிப்பாரு! ரொம்ப தான்‌ ஓவரா போயிட்டு இருக்காரு...!' என அவள் மனம் கொந்தளித்தது. 

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now