💟 ஜீவாமிர்தம் 3

5.2K 162 69
                                    

மருத்துவமனையில் ஜீவாவின் காயத்தை ஆராய்ந்து நன்றாக சுத்தம் செய்து கையில் கட்டுப் போட்டதும் ஜீவா அர்ஜுனிடம், "அப்படியே கிளம்பட்டுமா மாம்ஸ்?" என்று கேட்டான்.

"எங்கடா போற?" என்று கேட்டவரிடம் சலிப்புடன், "எங்க போவேன்? கழுதை கெட்டா குட்டிச்சுவர், நம்ம ப்ளாட்டுக்கு தான் போறேன்; ஆனாலும் நீ இன்னிக்கு ஈவ்னிங்ல இருந்து என்னை ரொம்ப டென்ஷன் பண்ணுற மாமா!" என்று புகார் கூறியவனிடம்,

"கையை ஒழுங்கா தூக்கக் கூட முடியல. இதுல வீட்டுக்கு போய் என்னத்த கிழிக்க போற? வா நம்ம வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஒன் வீக் கழிச்சு ப்ளாட்டுக்கு போய்க்கலாம்!" என்றார் அர்ஜுன்.

அவர் தோளில் சாய்ந்து கொண்டு, "அம்மா, தங்கச்சிங்களை பார்க்கணும் போலிருக்கு மாமா! நீ எனக்கு அடிபட்டதை சொல்லாம அம்மாவை உங்க வீட்டுக்கு வரச் சொல்றியா?" என்று கேட்ட தன் மருமகனின் கன்னத்தில் தட்டிக் கொடுத்து விட்டு,

"நான் உன் மாமாடா; நீ பொறந்ததுல இருந்து உன்னை பார்த்துட்டு இருக்கேன். ஜெய்ட்ட இன்பார்ம் பண்ணிட்டேன். தலைவருக்கும் இங்க ஏதோ வேலை இருக்காம். இந்நேரம் கிளம்பியிருப்பாங்க. காலையில வந்துடுவாங்க. சந்தோஷம் தானே?" என்று கேட்ட தன் மாமனிடம் இல்லையென தலையசைத்து,

"முக்கியமான ஒரு விஐபி பெர்மிஷன் குடுக்கணும். கால் பண்ணி ஸ்பீக்கர்ல போட்டு பேசு!" என்றான் ஜீவா.

"டேய் அது என் வீடுடா! உன்னை நான் அங்க கூட்டிட்டு போறதுக்கு அவ பெர்மிஷன் எதுக்கு வேணும்? அவளுக்கு உன்னை பார்க்க பிடிக்கலன்னா அவளோட ரூம்ல இருந்துக்கட்டும்!" என்று சொன்ன தன் மாமனிடம் சிரிப்புடன்,

"அவளுக்கு என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும் மாமா! ஆனா நான் செய்யாத தப்புக்கு அப்பா எனக்கு தண்டனை குடுத்த மாதிரி, இவ நான் அவ கிட்ட பேசின பேச்சுக்கு இவ்வளவு நாளா என் கிட்ட பேசாம என்னை தண்டிச்சுட்டு இருக்கா. ஆனா எனக்கும், அவளுக்கும் நடுவில லவ் இல்லன்னு எல்லாம் சொல்ல முடியாது!" என்று சொன்ன ஜீவாவை குழப்பமாக பார்த்து கொண்டு இருந்தார் அர்ஜுன்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now