💟 ஜீவாமிர்தம் 12

2.8K 133 60
                                    

ஜெய் நந்தன் ஊருக்கு கிளம்பி போய் மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அவர் கிளம்பும் போதும் தனித் தனியாக ஒவ்வொருவரிடமும் சென்று தன் மகனை ஆனந்த ஸாகரத்துக்கு கூட்டி வந்து விடுங்கள் என்று முடிந்தவரை புலம்பி விட்டு தான் சென்றார். நிர்மலா வழக்கம் போல ஒரு சிறு சிரிப்புடன் அவருடைய அலப்பறைகளை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தார்.

கவிப்ரியா உறுதியாக ஜீவானந்தனை கூட்டி வருவதாக அவரிடம் ஒத்துக் கொண்ட பின்னர் தான் சற்று அமைதியடைந்து கிளம்பினார்.

அன்று காலையில் பலராமும், கீதாவும் அவரவர் வேலையை கவனிக்க அவரவர் நகைக்கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்த போது கீதா அவரை நிறுத்தி, "ராம் ஒரு பத்து நிமிஷம் உன் கூட பேசணும். நீ ஃப்ரீயா?" என்றார் கீதா.

விரிந்த புன்னகையுடன் தன் மனைவியை அணைத்துக் கொண்டு, "என் க்யூட்டி டைம் கேட்டா நான் எவ்வளவு பிஸியா இருந்தாலும் ஃப்ரீ ஆகிட வேண்டியது தான்...... சொல்லும்மா! என்ன பிரச்சனை? பாகியா....ராகியா..... எந்தப் புழு உனக்கு குடைச்சல் குடுக்குறது?" என்று கேட்ட தன் கணவனிடம் சிரிப்புடன்,

"எனக்கு பிரச்சனைனா அது பசங்களால தான் இருக்குமா? ஏன் நீயெல்லாம் குடைச்சல் குடுக்குறது இல்லையாக்கும்?" என்று கேட்ட தன் மனைவியை முத்தமிட்டு,

"நானெல்லாம் ரொம்ப அப்பாவி பையன்டீ, வீடு அதை விட்டா ஜ்வல்லரின்னு வாழ்ந்துட்டு இருக்கிற பரிதாபமாகரமான ஜீவன்..... ஏதாவது அட்வென்சர், ஒரு த்ரில் எதுவுமே இல்லாம என் லைஃப் ரொம்ப ட்ராஜெடியா போயிட்டு இருக்கு. இதுல உனக்கென்னம்மா நான் தொந்தரவா இருக்கேன்?" என்று கேட்ட தன் கணவனை இடுப்பில் கட்டிக் கொண்டு,

"ராம் கண்ணா, இந்த தடவை மலைக்கு போகும் போது நீயும் நானும் மட்டும் யாருக்கும் தெரியாம கழண்டுகிட்டு பைக்ல போகலாமா? இட் வில் பீ மோர் ஃபன்!" என்று கேட்ட தன் மனைவியை பார்த்து, "சூப்பர்டா க்யூட்டி! ரொம்ப நாளாச்சு. நைஸா எஸ்கேப் ஆகிடுவோம்!" என்று கண்சிமிட்டி புன்னகைத்தார் பலராம்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Donde viven las historias. Descúbrelo ahora