💟 ஜீவாமிர்தம் 35

2.4K 137 21
                                    

அன்று மாலையில் தான் பார்கவ் ஹைதராபாத்தில் இருந்து திரும்பி வந்திருந்தான். அவனது க்ளையண்ட்டின் கம்பெனியில் ஏஜிஎம் என்று போய் நான்கு நாட்களுக்கு கணக்குகளுடன் போராடி விட்டு வந்திருந்தான். கண்களை மூடினால் கூட கனவில் பிகர்களாக தான் வந்தது.

ராகவ் இரண்டு நாட்களுக்கு முன்பு தடாலடியாக சென்னைக்கு வந்து இறங்கியிருந்தான். வந்தவுடன் முதல் வேலையாக சரஸ்வதியின் காலில் விழுந்து வணங்கியவன்,

"சரஸ் ஊர்ல இருந்து ராஜேஷ் உனக்காக குடுத்து விட்ட புடவை; அவருக்கு அங்க நெறய ப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டாங்க, ஸோ டைம் கிடைக்குறப்போ உன்னைய கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்காரு. ஸாரி உனக்கு பிடிச்சிருக்கா சரஸ்?" என்று கேட்ட தன் பேரனிடம் தலையாட்டி விட்டு, "நீ வரும்போது ராஜேஷும் வந்துடுவார்ன்னு யாரோ சொன்னாங்க!" என்று சற்று குழப்பத்துடன் நின்றவரிடம்,

"வேற யாரு இந்த கவி குண்டம்மா தான் அப்படி பொய் சொல்லியிருப்பா, ஆமா நீ ஏன்டீ முகத்தை இப்படி உம்முன்னு வச்சிருக்க?" என்று கேட்டவனிடம் உச்சுக் கொட்டினாள் கவிப்ரியா. ராகவை வரவேற்கவும் தன்னைப் பார்க்கவும் ஜீவா வரவில்லை என்ற  எரிச்சலில் இருந்தாள். அர்ஜுன், மீரா, பலராம், கீதா, ஜெயந்தன், பத்மா அனைவரும் அன்று வீட்டில் இருக்க கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

"என்னடா இன்ஜினியரு..... அப்பப்போ ஊருக்கு வந்து தலைய காட்டிட்டு போயிருக்கலாம்லடா....... ஒரேடியா அங்கயே உட்கார்ந்துட்ட?" என்று கேட்ட ஜெயந்தனிடம்,

"ஹலோ மிஸ்டர் பூம்பாறை நாட்டாமை; நான் வந்துட்டு வந்துட்டு போக நீங்களா பணம் குடுப்பீங்க? நான் ஸ்டடீஸ் கம்ப்ளீட் பண்ண, இத்தனை வருஷமா அங்க தங்கியிருக்க எங்கப்பா அனுப்பின பணம் வெறும் ரெண்டு லட்சம் தான் தெரியுமா? மத்ததெல்லாம் எனக்கு கிடைச்ச எய்டும், என் பார்ட் டைம் மணியும் தான்! நிறைய செலவு பண்ற; ஊருக்கு வந்து சேருன்னு சொல்லிட்டாருன்னா நான் என்ன பண்றது? அதனால கார்டனிங், குக்கிங், க்ளீனிங், எல்லா வேலையும் கத்துக்கிட்டாச்சு. பத்மாச்சி நீயும் என்னைய ரொம்ப மிஸ் பண்ணியா?" என்று இருவரையும் கட்டிக் கொண்டு அவர்களிடமும் ஆசி பெற்றான்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now