💟 ஜீவாமிர்தம் 24

2.4K 141 24
                                    

அன்று காலையில் ஜீவா விழித்தெழும் போது எட்டு மணியாகி விட்டது. இனியாவை எப்படி ராசு வந்து கூப்பிட்டதும் அனுப்பி வைக்கலாம் என்று தன் தந்தை, தாய், சித்தப்பா மூவரையும் வறுத்தெடுத்து விட்டு, ராசுவையும் கூப்பிட்டு அவனிடமும் இரண்டு முறை  குதித்து விட்டு இனியா பத்திரம் பத்திரம் என்று நூறு முறை சொல்லி விட்டு அவன் படுப்பதற்கே இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகி விட்டது. மலையில் அவனை எழுப்பி விடும் அலாரம் ஆறு மணிக்கு அலற அதை தலையில் குட்டி விட்டு போர்த்திக் கொண்டு மறுபடியும் உறங்கி விட்டான்.

"ஜீவாம்மா இன்னும் பெட்டை விட்டு எழுந்திரிக்க மனசு வரலையா? வேக் அப் மேன்!" என்று போர்வையை உருவிய அர்ஜுன், "அடச்சீ...... என்னடா கருமம் இது? ஒரு பெர்முடாவாவது போட்டு தொலையேன்! எருமை மாடு மாதிரி வளர்ந்துட்டு இத்துணூண்டு ஷார்ட்ஸை போட்டுட்டு சுத்துது பாரு! இந்தா காஃபி, ஃப்ரெஷ் ஆகிட்டு மறக்காம பல் தேய்ச்சுட்டு குடிப்பியாம். உங்கத்தை உன்கிட்ட சொல்லச் சொன்னா. சொல்லிட்டேன்! மாமா காலேஜ்க்கு கிளம்பட்டுமா......?" என்று கேட்டவரிடம் லேசான முணகலுடன் உடம்பை நெளித்து சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்தவன், "வந்ததுல இருந்து பாயிண்ட் பாயிண்டா இவ்வளவு பேசினியே.....எனக்கு ஒத்த குட்மார்னிங் சொன்னியா? உன் முகத்தில முழிச்சுருக்கேன். இன்னிக்கி நாள் எப்படி இருக்கப் போகுதோ.....இல்ல நான் தெரியாம கேக்குறேன்! ஒரு யங் ஹாண்ட்ஸம் மேனோட ரூமுக்குள்ள பெர்மிஷன் இல்லாம எண்ட்ரி குடுத்துட்டு எவ்வளவு தைரியம் இருந்தா பெட்ஷீட்டை வேற உருவி எடுப்ப? ஒரு வேளை இதுக்குள்ள அம்முலுவும் என் கூட இருந்தா நீ என்ன பண்ணியிருப்ப மாமு........ அவ இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் என் ரூமுக்கு வந்திருந்தா. சொல்ல சொல்ல கேக்காம ரூமுக்குள்ள வந்து, பெட்ல என் பக்கத்துல படுத்துட்டு எழுந்துரிச்சு போக மாட்டேன்னு ஒரே அடம்! அப்புறம் நான் தான் அவளை கொஞ்சி கிஸ் எல்லாம் குடுத்து, அவ கால்ல........!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவனிடம் நிறுத்துமாறு சைகை செய்த அர்ஜுன்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Wo Geschichten leben. Entdecke jetzt