💟 ஜீவாமிர்தம் 52

1.7K 104 14
                                    

ஹாலில் அனைவரும் ஒன்றிணைந்து அமர்ந்திருந்த போது பார்கவ் அவனுடைய காதல் கதையை அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்க ஜீவானந்தன் வந்து தன் தந்தையின் அருகே அமர்ந்து கொண்டான்.

இனியாவும் ராசுவும் ஒருவருக்கொருவர் கையைக் கோர்த்து கொண்டும், ஏதோ ரகசியமாக பேசிச் சிரித்துக் கொண்டும் இருக்க அர்ஜுனின் அருகில் சென்று அமர்ந்து கொண்ட தன் மனைவியைப் பார்த்து அவனுக்கு எரிச்சல் வந்தது.

இவ்வளவு தூரம் அவளுக்கு புரிய வைத்தும் இன்னும் கவிப்ரியாவின் முகத்தில் முழுதாக தெளிவு வராத காரணத்தால் ஒரு பெருமூச்சை வெளியேற்றி தலையை குலுக்கி கொண்டான்.

"பாகி அத்தான், அண்ணா வந்துட்டான்..... நீ உன் லவ் ஸ்டோரிய சீக்கிரம் சொல்லி முடிச்சன்னா கேமை ஸ்டார்ட் பண்ணலாம்!" என்று ஷைலஜா பார்கவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்க கௌதமனும் ராகினியும் அனைவரிடமும் சொல்லி விட்டு சென்னைக்கு கிளம்பினர். தன் கணவரை மட்டும் இந்த திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று சொல்லி வருந்திய சரஸ்வதியை அழைத்து கொண்டு ராகவ் வெளியே சென்றிருந்தான்.

அபிநயா தன் கணவனை ரசித்தபடி தனது பள்ளிப் பருவ நாட்களை அசைபோட்டுக் கொண்டிருக்க ஜீவானந்தன் ஒரு பொறுமையற்ற எரிச்சலுடன் பார்கவின் அருகில் வந்து நின்றான்.

"வா மச்சி நீயும் வந்து என் லவ் ஸ்டோரிய சொல்றதுக்கு ஹெல்ப் பண்ணு, இந்த அபியை கூப்பிட்டா வெட்கப்பட்டுட்டு வர மாட்டேங்குறா! என் லவ் ஸ்டோரிய நம்ம வீட்ல இருக்கிறவங்க யாரும் கேக்கவேயில்லயே.... அதான் எல்லார்ட்டயும் சொல்லிட்டு இருக்கேன்!" என்று சொன்ன தன் மாமன் மகனிடம்,

"பாகி உன் லவ் ஸ்டோரிய சூப்பரா நான் சொல்லட்டுமா?" என்று ஜீவா பார்கவிடம் கேட்க ஜீவானந்தன் பேச ஆரம்பித்தால் இன்னும் கால் மணி நேரம் தன்னுடைய காதலைப் பற்றி விலாவாரியாக சொல்லுவான் என்று நினைத்த பார்கவ் மைக்கை அவனிடம் நீட்டினான்.

"அதாகப்பட்டது மக்களே இந்த பாகியும், அபியும் சேர்ந்து படிச்ச ஸ்கூல்ல கல்ச்சரல்ஸ் வர, அபிநயா கல்ச்சரல்ஸ் செகரட்டரியா இருக்க, ஒரு மொக்கை ஈவெண்ட் ஆர்கனைஸரை தெரியாம அவங்க செலக்ட் பண்ணி கடைசி நேரத்தில் சொதப்பிடுச்சு, நம்ம ஹீரோ ஸார் அபிநயசரஸ்வதி கைய பிசைஞ்சுட்டு இருக்கிறத பொறுக்க முடியாம அவரோட அம்மாவை கொண்டு போய் ஸ்டேஜ்ல ஏத்தி அவர் பாடி, கீத்துவும் வயலின் வாசிச்சு ப்ரோக்ராம் லாஸ்ட் மினிட் தம் பிரியாணி மாதிரி சும்மா கும்முன்னு க்ளாப்ஸ் அள்ளிடுச்சு, அதுக்கப்புறம் அண்ணலும் நோக்க அவங்களும் நன்றி சொல்ல இப்படி ஆரம்பிச்ச அவங்க நட்பு கொஞ்ச நாள் லவ்வாகி, அப்புறம் நிறைய நாள் ஒன் சைட் லவ்வாகி, இப்போ கல்யாணத்துல முடிஞ்சு இன்னும் ஜெகஜோதியா கன்டினியூ ஆகிட்டு இருக்கு, மச்சி கதை முடிஞ்சுடுச்சு, சீக்கிரம் இந்த செலிபரேஷனை முடிச்சிங்கன்னா அதுக்கப்புறம் டின்னர முடிக்கலாம், ஏன்னா பாகிக்கு பசிக்கும், அதான் சொல்றேன், ஷைலு இந்தாடா மைக், ஏதோ கேம் வைக்கணும்னு சொன்னியே?" என்று கேட்டு தன் தங்கையை அழைத்த ஜீவானந்தனை சாவடிக்கும் தோரணையில் பார்த்த பார்கவ்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now