💟 ஜீவாமிர்தம் 53

2.1K 125 25
                                    

கவிப்ரியா தன் சித்தப்பாவின் முகத்தில் தெரிந்த இறுக்கமான பாவத்தை பார்த்து சற்று மிரண்டு போய் தான் நின்று விட்டாள். இன்று இப்போது இல்லா விட்டால் இனி எப்போதும் இல்லை என்று அவள் மனதிற்குள் ஒரு எண்ணம் தோன்றத் தான் அவனிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டாள், ஆனால் அப்படிக் கேட்கும் போதும் சரி பின் திருமணம் செய்து கொண்ட போதும் சரி பின்விளைவுகளைப் பற்றி எல்லாம் பெரிதாக இருவருமே யோசிக்கவில்லை. ஜீவானந்தன் எதற்கும் கலங்காமல் தைரியமாக இருக்க தன் திருமணத்தால் கவிப்ரியா தான் நெஞ்சில் பாரத்தை ஏற்றி வைத்தது போல் எவரையும் நிமிர்ந்து எதிர்நோக்க கூட தைரியமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள். பலராமிற்கும் விஷயம் தெரிந்து விட அவளது பயம் இரு மடங்காகி விட்டது.

அறைக்கதவை சாற்றிய பலராம் கவிப்ரியாவை அழைத்து தன் எதிரில் நிறுத்தி, "கவிம்மா இத்தன வருஷத்துல நீயோ பாகி, ராகியோ எங்கட்ட எதுவும் வேணும்னு கேட்டு நானோ, இல்ல அப்பாவோ உனக்கு அது வேண்டாம்ன்னு எந்த விஷயத்துக்காவது அப்ஜெக்ஷன் சொல்லியிருக்கமா?" என்று கேட்ட தன் சித்தப்பாவிடம் கரம் கூப்பி, "ஸாரி சித்தப்பா; எல்லாரையும் விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு தான் ஜீவாவும் என்கிட்ட சொன்னான். நான் தான் இப்பவே பண்ணிக்கலாம்னு அவன்ட்ட அடம் பிடிச்சேன், இப்போ உங்களையெல்லாம் பார்த்த பிறகு ஃபீலிங்கா இருக்குன்னாலும் அந்த நேரம் நீங்க யாரும் எங்களுக்கு நியாபகமே வரல சித்தப்பா. சச் அ லவ்லி மொமெண்ட், அவர் மேரேஜ் ஜஸ்ட் ஹேப்பண்ட் லைக் அ ட்ரீம்! இதுக்கு நீங்க பனிஷ்மெண்ட் குடுத்தாலும் எனக்கு தான் சித்தப்பா குடுக்கணும், ஏன்னா முழுக்க முழுக்க ஜீவாவை கம்பெல் பண்ணி சம்மதிக்க வச்ச தப்பு என்னோடதுதான்!" என்று சொல்லி விட்டு பலராமின் முகத்தை பார்த்துக் கொண்டு நின்றாள் கவிப்ரியா.

அடக்க முடியாத கோபத்துடன், "என்னது ஜஸ்ட் ஹேப்பண்டா? வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் சந்தோஷமா எதிர்பார்த்து காத்துட்டுருக்குற கல்யாணம்...... உனக்கு சின்னப்புள்ள விளையாட்டு மாதிரி விளையாட்டா போச்சா? இல்ல நீ என்ன சொன்னாலும் அதுக்கு வீட்ல எல்லாரும் தலையாட்டிடுவாங்கன்ற திமிராகிடுச்சா? எவனோ ஒருத்தனுக்கு கல்யாணம்னு கேட்டு தாலி செஞ்சு வச்சுட்டு, ப்ளான் பண்ணி நீங்க ரெண்டு பேர் மட்டும் இருக்குற நேரம் கல்யாணம் பண்ற அளவுக்கு என்ன இப்போ அவசரம் வந்துடுச்சு..... வீட்ல பெரியவங்க எல்லாரும் உயிரோட தானே இருக்கோம்? அப்புறம் என்ன இந்த ஜஸ்ட் ஹேப்பண்ட், இப்பவே பண்ணிக்கலாம் இப்படி பேத்தல் எல்லாம்...... கவிப்ரியா?" என்று கேட்ட பலராம் தன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் கவிப்ரியாவின் கன்னத்தை நோக்கி கைகளை உயர்த்தியிருந்தார்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Donde viven las historias. Descúbrelo ahora