மூங்கில் நிலா 1

7.7K 127 52
                                    

முடிந்தது... எல்லாமே முடிந்தது போலத்தான் அவளுக்கும் தோன்றியது. ஏன் அவனுக்குமே அப்படிதானே தோன்றி இருக்கும்? வந்த வேலை என்ன? இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன? தான் எப்படி அவன் மனைவி ஆக முடியும்? மனதால் பல வருடங்களுக்கு முன்பே சவமடித்து விட்ட கனவுகள் ஆயிற்றே.

அருகில் கணவன் என்று அமர்த்திருப்பவனை எப்படி ஏறெடுத்து பார்ப்பாள்? நாடகம் ஆடி அவனை மணந்து கொண்டதாய் அல்லவா நினைத்து இருப்பான்

Ups! Ten obraz nie jest zgodny z naszymi wytycznymi. Aby kontynuować, spróbuj go usunąć lub użyć innego.

அருகில் கணவன் என்று அமர்த்திருப்பவனை எப்படி ஏறெடுத்து பார்ப்பாள்? நாடகம் ஆடி அவனை மணந்து கொண்டதாய் அல்லவா நினைத்து இருப்பான். அப்படித்தான் நினைத்தேன் என சொல்வது போல் கடினமுற்றிருந்தது அவன் முகம். இப்பொழுது அவள் வனமோகினி இல்லை. திருமதி வசீகரன் வனமோகினி. ஒரு காலத்தில் அப்படித்தானே அனைவரும் அழைப்பார்கள் என்று எண்ணி பூரித்திருந்தாள். இப்பொழுது கிடைத்து விட்டதே என்று பூரிக்க கூட  முடியாமல் கூனி குறுகியல்லவா அமர்ந்திருந்தாள்.

தனக்கு கல்யாணம் ஒரு கேடா? அதுவும் இந்த நல்லவனோடா? அதற்கு என்ன தகுதி தனக்கு இருக்கு? இறுதி வரை துணை வருவேன் என்று மீளாத்  துயரத்தில் அவளை தள்ளி விட்டு அற்ப ஆயுளில் அவளை நிர்கதியாக்கி விட்டு அவள் காதலன் வாசுதேவன் மறைந்து ஒரு வருடம் கூட ஆகவில்லையே, அதற்குள் அவளுக்கு திருமணமா?

தன்னிலை உணர வனமோகினிக்கு சிறிது நேரம் ஆயிற்று. வசீகரன் திருமணத்திற்கு வந்தவள், தற்போது மணமகளாய் அவன் தந்த தாலியை  வாங்கி விட்டிருந்தாள். அதிர்ச்சி ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கம், தன்னிரக்கம் ஒரு பக்கம் மென வன மோகினி பெரிதும்  துவண்டிருந்தாள்.

இயந்திர கதியாய் வசீகரன் இழுத்த இழுப்பிற்கு திருமண சடங்கில் கண்களில் ஈரம் கோர்க்க வனமோகினி எல்லாவற்றையும் செய்தாள்.

மூங்கில் நிலா (Completed)Opowieści tętniące życiem. Odkryj je teraz