மூங்கில் நிலா -6

3.6K 102 18
                                    

இவ்வாறே வனி-வசி நாட்கள் இன்பமாய் நகர, ஒரு கட்டத்தில் வசி ரவிக்காக தன்னையே விட்டுக் கொடுக்க முனைந்தது வனமோகினிக்கு தெரிய வந்தது.இந்த விஷயம் வசி அர்ஜுனனிடம் மட்டும்தான் பகிர்ந்து கொண்டிருந்தான்.

மேல் படிப்பை அவன் வெளியூரில் தொடர, விடு முறையில் ஊட்டி திரும்பியவன், பூவேலியில் வனியை சந்தித்தான். திரும்பவும் வசியுடன் நட்பாகி விட்டதாய் மகிழ்ச்சியுடன் அவனுடன் பகிரவும், அர்ஜுனும் வசி அவ்வாறு முடிவெடுக்க வேண்டிய காரணத்தை உளறி விட்டான்.

அவன் வரையில் வனி இன்னமும் அதே பழைய வாலு பிள்ளையாய் தானே உருவகப்படுத்தியிருந்தான். அவனுக்கு எங்கே தெரியும் வனியின் மனமாற்றங்கள். பழைய வனியாய் இருந்திருந்தால் சிரித்துக் கொண்டே இலகுவாய் இந்த விஷயத்தை கடந்திருப்பாள்.

இந்த கடன்காரன் வசிதான் பேசாத இரண்டு வருடங்களில் புதிய வனியை சிருஷ்ட்டித்து விட்டானே. இந்த வனி புதியவள்.

எளிதாக கலங்க கூடியவள். தான் வசிக்கு ஒரு பொருட்டு அல்ல, அதனால்தானே எளிதாய் தன்னை அந்த ரவிக்கு தாரை வார்க்க பார்த்திருக்கின்றான்.
என்ன தைரியம் இவனுக்கு.

மனதிற்குள் ஏதோ பிசைவது போல இருந்தது. இந்த மாதிரி யாராவது இரந்து கேட்டால் தூக்கி கொடுக்க கூடிய பொருளா அவள்?  அவளுக்கென்று ஒரு மனசு இல்லையா?

அவனில்லாமல் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்.?
இடையில் பாட்டி இறப்பு, வானதி பிரிவு, தோள் கொடுக்க வேண்டியவன் அவளை தனிமையில் அல்லவா திண்டாட வைத்து  விட்டான்.

எதிர்காலத்தில் தன்னை இவன் எப்படி வாழ வைப்பான்? வனமோகினி நிறைய யோசித்தாள். இது காதலிக்கும் வயது கூட இல்லையே. தவறான ஒரு முடிவு கூட அவள் எதிர்காலத்தை சிதைத்து விடாதா?

அவளால் அவன் காதலை உதற முடியும். ஆனால் அவன் நட்பை உதற முடியாதே.

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
மூங்கில் நிலா (Completed)Where stories live. Discover now