மூங்கில் நிலா - 5

3.6K 104 20
                                    

ஒரு வழியாக வனி, வசி, வானதி 11ம் வகுப்பிற்கு முன்னேற, புதிதாய் வகுப்பிற்கு ரவி எனும் புதிய மாணவன் வந்தான். இயல்பாய் அனைவருடன் எளிதில் பழகுபவனுக்கு வசீகரன் உற்ற தோழன் ஆனான்.

நம்ப சரவெடி வனமோகினி லூட்டி தான் எவரையும் இழுக்குமே. ரவிக்கு வனி மேல ஈர்ப்பு வந்தது. இதை முதலில் உணர்ந்தது வசிதான்.

இதயத்தில் ஓரமாய் ஒரு வலி உண்டாயிற்று. முட்டாள்தனமாய் அவன் செய்த ஒரு காரியம் வனமோகினி வாழ்க்கையே வேறு மாதிரி ஆகும்படி செய்து விட்டது.

ஒரு சமயத்தில் வசியால் ரவிக்கு விபத்து ஏற்படும் நிலை ஆயிற்று. கொஞ்சம் தவறியிருந்தாலும் அதில் ரவிக்கு உயிர் போயிருக்கும். ஆனால் அதில் இருவரும் தப்பிவிட்டனர். தவறு வசியுடையது என்றாலும் ரவி அதை பெரிதுபடுத்தவில்லை.

அந்த நட்பிற்கு அவன் இழக்கத் துணிந்தது அவனது  உயிரானவளை.
வனி பற்றி நன்கு அறிந்தவன், அவன் இல்லாமல் எப்படி இருப்பாள் என்று யோசிக்க கூட மறந்து விட்டான்.

ஏதோ ஒரு சண்டையை சாக்கு வைத்து வனியோடு பேசுவதை நிறுத்தினான். வலிய வந்து அவள் பேசினாலும் விலகி விலகி ஓடினான். அப்படியாவது அவள் ரவிகூட நெருங்கி பழகுவாள் என்ற நப்பாசை அவனுக்கு.

இதனிடையே உற்றத்தோழி வானதியும் அவள் தந்தை பணி மாற்றம் காரணமாய் டெல்லிக்கு சென்று விட்டாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

இதனிடையே உற்றத்தோழி வானதியும் அவள் தந்தை பணி மாற்றம் காரணமாய் டெல்லிக்கு சென்று விட்டாள். வசியின் பாரா முகம் வலி யென்றால் சின்ன வயதிலிருந்தே பாட்டியிடம் வளர்ந்த வனமோகினி வாழ்வில் மற்றொரு இடியாய் அவள் பாட்டியும் கேன்சரில் இறந்து விட்டார். இறப்பிற்கு கூட வசி செல்லவில்லை.

மூங்கில் நிலா (Completed)Where stories live. Discover now