மூங்கில் நிலா - 14

3.2K 93 7
                                    

இப்படி நாட்கள் கரைய, வனமோகினிக்கு தாலிப் பிரித்து கோர்க்க வனியின் பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

கல்யாணம்தான் திடிர்னு நடந்திருச்சு. மற்ற சடங்குகளாவது சரியாய் நடக்க வேண்டும் என்பதே அவர்கள் அவா.

வசி வனியிடம் இதைப் பற்றி பேசவும் அவர்களும் சரியென்றனர்.கூடவே திருமண விருந்தையும் சேர்த்து வைத்து விடுவதாய் திட்டம்.

வனியும் வசியோடு உற்சாகமாய் கிளம்பி விட்டாள்.வசிக்கும் சந்தோசமே.வனிக்கூடவே ஒட்டிக் கொண்டு திரியலாமே.

வனியின் வீடும் விசாலமாய் பெரிதாகவே இருந்தது.
வனி ஒற்றைப் பிள்ளையாய் நின்றுவிட, அவளோடு விளையாட்டுத் தோழிகளாய் குலாம் அமைக்கவே அவளுடைய சித்தப்பாக்கள் ஆளுக்கு மூன்று மூன்று பெண் பிள்ளைகளையும் அத்தை அறிவழகி வழி மூன்று பெண் பிள்ளைகள் என வனியின் ஈடுக்கு பெற்று வைத்திருந்தனர்.

வனியோடு சேர்த்து 10 பெண் பிள்ளைகள் அந்த வீட்டையே அல்லி இராஜ்யம் செய்தனர்.
படிப்பு வேலை என்று ஒவ்வொருவராய் பருவத்தில் பிரிந்து செல்ல வனியின் விஷேசத்தில் ஒன்று கூடினர்.

அனைவரும் வனியை பார்த்த சந்தோசத்தில் "டேய் கண்ணா வந்திட்டியா? பார்த்து எவ்ளோ வருஷங்கள் ஆச்சு? ஜோரா வளர்ந்திடியேனு " ஆளாளுக்கு அவளை மொய்த்துக் கொண்டனர்.

அவளும் "வாங்கடி எம் வஞ்சிங்களா..இந்த கண்ணணை விட்டுட்டு எல்லோரும் எஸ்கேப் ஆயிடிங்களேடி"மோகமாய் கண்ணடித்தாள்.

வனி அனைவரையும் கட்டிக் கொண்டாள். தூரத்தில் நின்று இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வசிக்கு எதுவும் புரியவில்லை.

வனியை இவர்களும் கண்ணா என்று விளிப்பதும், அவள் இவர்களை பார்த்து ஒரு ரொமான்ஸ் லுக் விடுவதும் வசிக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

அவன் முழிப்பதைக் கண்ட அவன் மாமியார் சுமதி தான்,

"என்ன தம்பி இப்படி அசந்துட்டிங்க? இவளுங்க கொட்டத்தைப் பார்த்தா?

மூங்கில் நிலா (Completed)Where stories live. Discover now