மூங்கில் நிலா -11

3.2K 96 13
                                    

ஆவலோடு வனியைத் தேடி வீட்டிற்கு ஓடியவனை, வாசலில் கேட்ட சிரிப்பு சத்தம் திடுக்கிட வைத்தது.

ஹாலில் அவனோடு மலேசியாவில் படித்த அவன் ஜுனியர் மாலதி செல்லம்மாவை கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

வசியைப் பார்த்ததும் ஆவலாய் தாவி வந்தாள். "ஹலோ மை டியர் சீனியர், ஹொவ் ஆர் யூ? எங்க உங்க பொண்டாட்டி ஷைலு? சாரி சீனியர், நேத்துதான் நம்ம ஊருக்கே வந்தேன். உங்க மேரேஜ்க்கு வர கூட முடியல, அதான் வந்ததும் ஊட்டிக்கு ஓடி வந்திட்டேன் " பட படனு சரவெடிப் போல மாலதி பேசினாள்.

"ஹேய் ரிலாக்ஸ் ஜுனியர், ஏன் இவ்ளோ பதட்டம், மெதுவாத்தான் பேசேன், அது சரி தனியாவ வந்தே நீ " வசி வினவினான்.

"நோ சீனியர், கூட அந்த டப்பா காமெரா கதிரையும் கூட்டிக் கொண்டுதான் வந்தேன். அந்த லூசு எங்கயோ சினரி நல்லா இருக்கும் னு, அந்த டப்பா கமெராவை தூக்கிட்டு போயிடுச்சு "மாலதி கூற வசி சிரித்துவிட்டான்.

ஏதோ கூற எத்தனிக்கையில் அந்த கதிரே வந்து சேர்ந்தான்.

"ஹாய் சீனியர் நல்லயிருக்கிங்களா, என்ன மாதிரி ஊரு இது, ஜிலு ஜில்லுனு செம்மையாயிருக்கு போங்க, வழியில் ஒரு தேவதையை சந்திச்சேன், என்ன ஒரு அழகு, நளினம். எவ்ளோ நீண்ட கூந்தல்.

யாருனு தெரியல சீனியர், பொண்ணு காவிய தேவதை மாதிரி இருந்தா, பார்த்ததும் மனச பறிக்கொடுத்துட்டேன். நீங்க தான் அது யாரு எவருன்னு கண்டுப்பிடிச்சு தரணும் ". கதிர் அப்போவே கனவுலகில் மிதக்க..

அப்பொழுதுதான் வனி வீட்டிற்குள் பிரவேசித்தாள். அவளைக் கண்டதும் கதிருக்கு பேச்சு வரவில்லை.

பூவேலி ஏரிக் கரையோரம் இயற்கையை இரசித்தப்படியிருந்த வனமோகினியைதான் அவன் சந்தித்ததே.

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
மூங்கில் நிலா (Completed)Where stories live. Discover now