மூங்கில் நிலா -8

3.4K 100 6
                                    

மாலை அங்கே விரைவில் இருட்டத் தொடங்கிவிடும். சில சமயங்களில் மழைக் கூட பொழியும். வனிக்கு மழையென்றால் கொள்ளை குஷி.

எவ்வளவுதான் மழையில் நனைந்தாலும் காய்ச்சல் சளி என்று அவள்  அவதிப்பட்டது இல்லை. சில மனிதர்களைப் போல இயற்கை அவளை என்றுமே காயப்படுத்துவது இல்லைதான்.

விழித்தவள் குளித்துவிட்டு சாமி கும்பிட்டு விட்டு, பிறகு தான் வீட்டையே சுற்றிப் பார்த்தாள். 80 வருட பழமை வாய்ந்த கட்டிடம். வசி தாத்தா காலத்தில் ஆங்கிலேயர் பாணியில் கட்டிய வீடு அது. அதன் புரதானமே வனியை மயக்கும். பழமை விரும்பி ஆயிற்றே அவள்.

வசி அன்னை இருந்த வரைக்கும் ஜொலித்த அந்த பங்களா இப்பொழுது பொலிவின்றி இருந்தது.

வசி காலேஜ் முடிக்கும் வரை அவர்கள் அங்கேதான் இருந்தார்கள். பிறகுதான் தொழில் படிப்பு நிமித்தம் சென்னைக்கு சென்று விட்டனர். இந்த வீடும் வேலையாட்கள் பொறுப்பில் இருந்து,இப்பொழுது வசி தங்கும் இடமாய் மாறிவிட்டது .

அடிக்கடி தொழில் நிமித்தமாய் அலைபவனுக்கு இதை போஷாக்காக வைத்து கொள்ள நேரமேது.

கலாரசிகையான வனிக்கு அந்த வீட்டை அப்பொழுதே சுத்தம் செய்ய கை பரப்பரத்தது

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

கலாரசிகையான வனிக்கு அந்த வீட்டை அப்பொழுதே சுத்தம் செய்ய கை பரப்பரத்தது. இருந்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாய் இருந்து விட்டாள். செல்லம்மாவும் வேலைகளை முடித்து விட்டு சென்றிருக்க, வனி மட்டுமே வீட்டிலிருந்தாள்.

8 மணி போல வேலை முடிந்து வந்த வசி, ஹாலில் படம் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து புன்னகையித்தான்.

மூங்கில் நிலா (Completed)Donde viven las historias. Descúbrelo ahora