மூங்கில் நிலா -13

3.2K 90 8
                                    

மறுநாள் வசி "வேணி நம்ப எஸ்டேட்ட பார்த்தோம்ம்லே இன்னிக்கு உன் பூவேலிக்கு போகலாமா? ரொம்ப வருஷங்கள் ஆச்சு நான் அங்க வந்து.. பார்க்கணும் போல இருக்கும்மா. போகலாம்மா? " வசி கேட்கவும் வனி முதலில் தயங்கினாலும் பின் சரியென்றாள்.

காலை பசியாறலுக்குப் பின் இருவரும் பூவேலிக்கு பயணமானார்கள்.காலை கதிரவன் ஒளியில் மூடுபனி மெல்ல மெல்ல உருகி ஆவியாக, சாலை மருங்கில் வரிசை பிடித்து நிற்கும் தைல மரங்களின் வாசனை கலந்து பரவி வந்த காற்றை சுவாசித்தவாறு இருவரும் பூவேலியை வந்தடைந்தனர்.

வசிக்கு அந்த இடத்தைப் பார்க்கும் பொழுது மனதிற்குள் நிழல் மேகமாய் பழைய நினைவுகள் மன வானில் நழுவி ஓடின.

அப்போதைக்கும் இப்போதைக்கும் நிறைய மாற்றங்கள் வனியால் வந்ததுதான். வனி கைக்கு மாறிய இந்த இடத்தை வனி நிறைய விஸ்தரித்திருந்தாள். நேர்த்தியான அவளுடைய சிறு குடிலும் மூலிகைகள் மணமும் வசிக்கு பிடித்துதான் இருந்தது.

இவர்களைக் கண்டவுடன் பொன்னியும் ஓடி வந்து வரவேற்றாள். உடன் வசியைக் கண்டதும் வெட்கத்தோடு தலைக் குனிந்து கொண்டாள்.

முறையாய் வனி வசியை அறிமுகப்படுத்தவே எந்த வித கூச்சமுமின்றி சகஜமாய் பேச ஆரம்பித்தாள்.

வசிக்கு அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அந்த மூங்கில் தோட்டம். அவர்கள் காதலுக்கு வித்திட்ட அந்த மூங்கில் தோட்டத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவன் கண்களில் தெரிந்தது. வனியைக் கேட்டான்.

"டேய் கண்ணா அந்த மூங்கில் தோட்டம் இன்னும் இருக்கா? நான் பார்க்கலாமா? " வசி கேட்க,

வனி புன்னகையித்தாள்.
"இருக்கு வசி, வா போய் பார்க்கலாம் "

வசி கையைப் பற்றி அவள் குடிலுக்கு பின்னே சற்றே தள்ளியிருந்த மூங்கில் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள்.

பச்சை இலைகளை மலர்த்தி காற்றிற்கு ஏற்றாற்போல தலையாட்டும் மூங்கில் மரங்கள் வசியை வரவேற்பது போல இருந்தன.

மூங்கில் நிலா (Completed)Where stories live. Discover now