மூங்கில் நிலா -19

3.1K 96 9
                                    

வசியின்  அறையில்  அவள்  பொருட்கள்  நேர்த்தியாய்  அடுக்கப்பட்டிருந்தது. அட்டாச் பாத்ரூம் கூடிய  பெரிய  அறை.

அதற்குள் பால்கனியை  ஒட்டினாற் போல  இன்னொரு அறை  கண்ணாடி தடுப்பினால் ஆனது. வனி  இதுவரைக்கும்  வசி  அறைக்குள்  சுதந்திரமாய்  உலவியது கிடையாது. அதனால்  அந்த  கண்ணாடி  அறைக்குள்  நுழைந்ததும்  இல்லை.

பஞ்சு  போன்ற  மிருதுவான  மெத்தையும்  குளிருக்கு  இதமான  இராஜாய்யும் , டிம்  லைட்டில்  வசியின்  அறை  அழகாகத்தான்  இருந்தது.

வசி  வெளியே  போன்  பேசி  கொண்டிருக்க  வனி  அந்த  கண்ணாடி அறைக்குள்  பிரவேசித்தாள்.

அவளது  அறைக்குள்  இருக்கும்  அவர்களுடைய  பள்ளி கால  புகைப்படம்  பெரிதாக  டேவோலப் பண்ணி வைத்திருந்தான். வசியோட  ஸ்கூல்  டைம்  நினைவுகள்  எல்லாமே  அங்கேதான்  அடைக்கலமாகி யிருந்தன.

வனி  பிறந்தநாள்  பரிசாய்  கொடுத்த  பிள்ளையார். பள்ளிக்  காலத்தில்  அவள்  எழுதி  வைத்த கவிதை  புத்தகம், அவளுடைய  அபிமான  எழுத்தாளர்  திருமதி காஞ்சனா ஜெயதிலகர்  எழுதிய  "உன்னை கண்  தேடுதே " நாவல், அவளை  இந்த  நிலைக்கு  தள்ளி  விட்டிருந்த   அவளுடைய  காதல்  டைரி. எல்லாமே  அங்கேதான்  இருந்தது.

மனதிற்குள்,  "அட  பாவி  மவனே, என் கவிதை புக்  உன்கிட்டதான்  இருந்துச்சா? ஸ்கூல்ல  தொலைச்சிட்டேனே எவ்வளவு  தேடி  இருந்திருப்பேன்? 

தோ என்னோட  பேவரைட்  நாவல், இது  கூட தொலைஞ்சி  போச்சுன்னே  சொன்னியே? இந்த  டைரி  என்கிட்டதானே  இருந்துச்சு? எப்படி  இங்க வந்துச்சு? கிராதகா !" வனி  வசியை  கறுவினாள்.

அவள்  நினைத்ததும்  நேரில்  வந்து  நின்றான் அவள் நாயகன். வனியின்  முறைப்பே  அவனுக்கு  சகலதையும் சொல்லிற்று.

வனி  அவன்  காதைப்  பிடித்து  திருகியவாறே "ஏன்டா  திருட்டு பயலே எப்படா  இதெல்லாம்  திருடுனே?  எத்தனை  வாட்டி  கேட்டு  இருப்பேன், என் புக்க  பார்த்தியானு?

மூங்கில் நிலா (Completed)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin