மூங்கில் நிலா -20

3.2K 89 12
                                    

பூக்களின் பள்ளத்தாக்கு வனியின் கனவு பட்டியல்களில் ஒன்று.

ஒரே இடத்தில் பல் வேறு பூக்களின் அணிவகுப்பு, சிறிதும் செயற்கையின் சாயல் இன்றி இயற்கை வாரி இறைத்த சொர்கம் அல்லவா? பள்ளி பருவத்திலிருந்தே அங்கே ஒருமுறையாவது சென்று வந்து விட வேண்டும் என்பதே அவள் அவா.

அவள் சகோதரிகளும் அத்தை பெற்றெடுத்த இரத்தினங்களும்
இவளை போன்ற இரசனையுடையவர்கள் இல்லையே.தனியே அனுப்பவும் அவள் பெற்றோர் அனுமதி கிடையாது.

கனவாகிவிடுமோ என்ற நிலையில் இருந்த விஷயம் இன்று துணையாகி வந்தவன் தயவால் நிறைவேற போகிறதே.
வனி வானத்தில் சிறகு இல்லாமலே பறந்தாள்.

வேறெங்கும் காணக்கிடைக்காத அரிய வகை பூக்களும் விலங்குகளையும் தன்னகமாய் கொண்ட இந்த பீட பூமி உத்ரகாண்டத்தின் மேற்கு இமய மலை தொடர்ச்சியில் அமைந்திருக்கிறது.

சதா பனி பொழியும் இந்த மலை பூமியை ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை சுற்றுலாப் பயணிகள்
சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

மறு வாரமே வசி வனமோகினி டெல்லிக்கு விமானத்தில் பறந்தனர்.
ஜோஷிமத் நகரில் இருந்து ஒரு மணி நேர பயண தொலைவில் கோவிந்த் காட் என்னும் இடத்தை வந்தடைந்தனர்.

அங்கிருந்து பூக்களின் பள்ளத்தாக்கிற்கு நடந்து தான் செல்ல வேண்டும்.

இவர்களைப் போல பலரும் இயற்கையின் சீராடலை நேரில் கண்டு கழிக்க வந்திருந்தனர்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

இவர்களைப் போல பலரும் இயற்கையின் சீராடலை நேரில் கண்டு கழிக்க வந்திருந்தனர்.

ஒற்றையடி பாதை போல நீண்ட கல் பாதையின் இரு மருங்கிலும் காட்டுப் பூக்களும் கொடி வகைகளும் பிண்ணி பிணைந்து ஒரு வித நூதனதுடன் வனியை வரவேற்றன.

மூங்கில் நிலா (Completed)Where stories live. Discover now