மூங்கில் நிலா -4

3.9K 106 8
                                    

வசீகரன் -வனமோகினி சிறு வயது முதலே ஒரே பள்ளியில் படித்து வந்தவர்கள். வனமோகினி வெடி பட்டாசு என்றால் வசீகரன் அமைதியானவன்.

பெண் பிள்ளைகளோடு சேர்ந்து படித்தாலும் அவர்களோடு பேசுவது கிடையாது. ஒரு மாதிரி கூச்ச சுபாவம் உடையவன்.

மாறாக வனமோகினியோ எப்பொழுதும் நண்பர்கள் குழாமுடனே குட்டி மகாராணி போல வலம் வரும் வாயாடி சுட்டி.

பள்ளி பருவத்திலே, பேச்சு போட்டி, கவிதை, நடனம் எல்லாவற்றிலும் வெற்றி வாகை சூடும் சூட்டிகை பெண். தமிழ் மொழிப் பாடத்தில் அவளை அடிச்சுக்க ஆளே இல்லை. புலவி புலவினு  சக மாணவர்கள் அவளை கிண்டல் செய்வதும் உண்டு.

பெண் பிள்ளைகள் போல் அல்லாது ஒரு நிமிர்வுடனே நடக்கும் இயல்புடையவள். யாரிடமும் விகல்பம் இல்லாமல் பழகும் குணமுடையவள்.

வகுப்பில் அனைவருடனும் இயல்பாய் பழகுபவளை ஒருவன் மட்டும் ஏறெடுத்து பார்க்கவே மாட்டான். வேற யாருங்க நம்ம சிடுமூஞ்சி சிங்காரம் mr. வசீகரன்தான்.

அய்யா  அப்போவே  அப்படி.
வனமோகினியும் அந்த வயதில் அவனை அவ்வளவாக கண்டுக்கவே இல்லைதான்.

அவளுக்கென்று ஒரு தனி கூட்டம். தனி ராஜ்ஜியம்னு மஜாவா ஒரு வாழ்க்கை.
அது வரை தெளிந்த நீரோடையாய்  இவர்கள்  வாழ்க்கை நகர, வசீகரனே வனமோகினியை  தோழியாக  ஏற்கும் நிலையும்  வந்தது.

மோகினியுடன் தொடக்க  கல்வி பயின்று வந்த வானதி யுடன்  மட்டும்தான் வசீகரன்  பேசுவான். வனமோகினி போல  வானதி  அடாவடி கிடையாது. ஹை ஸ்கூலில் இருவரும்  வெவ்வேறு வகுப்பில் பிரிய, வசீகரன் வானதி  ஒரு வகுப்பிலும் வனமோகினி  வேறு வகுப்பிலும் படிப்பைத் தொடர்ந்தனர்.

வானதி இல்லாமல்  வனமோகினிக்கு ஒரு  கை  உடைந்தது போல  இருந்தது. தினமும்  அவளை காலையில்  வகுப்பு  ஆரம்பிக்கும்  முன்பே வானதியை  சென்று பார்த்து விட்டுதான் தன் வகுப்பிற்கு செல்வாள்.

வசீகரன் அங்குதான்  இருப்பான். அவனை  இவள்  கண்டு கொள்வதும்  கிடையாது.

மூங்கில் நிலா (Completed)Where stories live. Discover now