1.

5.4K 143 10
                                    

சந்தோஷ் தன் உடல் எடையை குறைக்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டு இருந்தான்.தான் மிகவும் குண்டாக இருப்பது அவனுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது.அதனால் தினமும் காலையில் நடை பயிற்சி மேற்க்கொண்டான்.

அபர்னா பார்ப்ப‌வரை காதலில் விழ வைக்கக் கூடிய அழகை கொண்டவள்.உயரமான ஒல்லியான

தோற்றத்தைக் கொண்டவள்.அவள் உடம்பை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள நடை பயிற்சி மேற்க் கொண்டாள்.

சந்தோஷ் அன்று வழக்கம்போல் ஒரு பூங்காவில் நடை பயிற்சி மேற்க் கொண்டான்.பூங்காவை பல முறை சுத்தி வந்து ஒரு மரத்தின் கீழ் உள்ள ஒரு பென்ச்சில் அமர்வது வழக்கம்.ஆனால் அன்று அங்கு ஒரு அழகான பெண் உக்கார்ந்து கொண்டு இருந்தாள்.தனது கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டு இருந்தாள்.


"ஏங்க ",என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.சந்தோஷை தவிற வேறு எந்த ஒரு பையனாக இருந்தாலும் அவள் அழகைக் கண்டு மயங்கி இருக்கக் கூடும்.

ஆனால் தன்னிடம் எந்த பெண்ணும் நட்பாக கூட பழக மாட்டாள் என்ற தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப் பட்டதால் அவளின் அபாரமான அழகு அவனை பாதிக்கவில்லை.

"இது நான் உக்காரும் வழக்கமான இடம் ",என்று அமைதியாக கூறினான்.

" இதுல உங்க பெயர் ஒன்றும் எழுதலையே", என்றாள் சிரித்தபடியே.

அவன் எதுவும் பேசாமல் அவளுக்கு எதிரே இருந்த இருக்கைக்கு சென்று அமர்ந்தான்.

சிறிது நேரம் கழித்து இரண்டு இளைஞர்கள் அவள் அருகில் வந்து அமர்தார்கள்.அவளை பார்த்து விசில் அடித்தும் அவள் கவனத்தை ஈர்ப்பதர்க்காக சத்தமாக பாட்டு பாடிக் கொண்டும் இருந்தார்கள்.அவளுக்கு சங்கடமாக இருந்தது.அங்கு இருந்து எழுந்து சந்தோஷ் அருகில் வந்தாள்.

"ஏங்க நான் இங்க உக்காரலாமா",என்றாள் தயக்கமாக.

"என் பெயரல்லாம் அதுல எழுதலீங்க நீங்க தாராலமா உக்காரலாம்"

,என்றான் சிரித்தபடியே.

அவனுக்கு நன்றி கூறி அவன் அருகில் அமர்ந்தாள்.

"நான் அபர்னா.நீங்க", என்றாள் தனது கையை நீட்டி.

"சந்தோஷ் ",என்று கூறி கையை குலுக்கினான்.

"நீங்க தினமும் இங்க வருவீங்களா"

" ஆமாங்க என் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிரேன்.

அவள் கைபேசி ஒலித்தது.

"சொல்லுங்க அம்மா"

"எங்க டீ இருக்க.மணிய பாத்தியா."

"ஸாரி அம்மா.பிரண்டு கூட பேசிகிட்டு இருந்தேன்.மணிய பாக்கலை.இப்போ வந்தரேன்",என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

"பிரண்டு "என்று அவள் கூறியதை கேட்டதும் சந்தோஷ் மிக மகிழ்ச்சி அடைந்தான்.

"சரி சந்தொஷ் நேரம் ஆச்சு .நாளைக்கு பாக்கலாம்",என்று கூறி விடை பெற்றுக் கொண்டாள்.சந்தோஷ் ஆனந்தத்தில் மிதந்துக் கொண்டு இருந்தான்.

என்னோடு நீ இருந்தால்!!Where stories live. Discover now