10.

2.1K 106 7
                                    

"என்னை நீ பார்க்க வருவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை சந்தோஷ்",என்றாள் திவ்யா .

"நீ கடற்கரைக்கு வா பேச வேண்டும் என்று கூப்பிட்ட போது ஏதோ பிரச்சனை என்று புரிந்தது அதான் வந்தேன்.என்ன ஆச்சு திவ்யா?",என்றான் அக்கரையாக.

      திவ்யா அழ தொடங்கினாள்.

சந்தோஷ் குழப்பம் அடைந்தான்.

"அழாதே என்ன ஆச்சுன்னு சொல்லு",என்றான் அவசரமாக.

"சந்தோஷ் உன்னக்கே தெரியும் நான் அருணை காதலித்தது.அவனும் என்னோடு நெருங்கி தான் பழகினான்.

அவனுக்காக நான் அமெரிக்கா சென்று படிக்க கிடைத்த வாய்ப்பை கூட தூக்கி எரிந்தேன்.ஆனால் அவன் என்னை காதலிக்கவே இல்லை என்கிரான்.என்னோடு நட்பாக தான் பழகினானாம்.காதல் என்ற ஒரு எண்ணமே அவனுக்கு வரவில்லையாம்.",என்றாள் வேதனையாக.

"அப்படி என்றால் என்னோடு விடிய விடிய பேசியது ,பல இடங்களுக்கு என்னோடு சுற்றியது இதல்லாம் பொய்யா",என்றாள் வெறுப்பாக

       "அதல்லாம் பொய்யும் இல்லை அவன் உன்னை காதலிக்கவில்லை என்பதும் பொய் இல்லை.அவன் எல்லா பெண்களிடமும் நீ அழகாய் இருக்கிறாய்,உன் நினைவு என்னை வாட்டுகிறது,என்னால் உன்னை மறக்க முடியவில்லை என்றல்லாம் விளையாட்டாக கூறுவான்.அதை நம்பி அவர்களும் அவனை காதலிப்பார்கள்.பின் அவன் மறுத்த பிறகு ஏமாந்து போவார்கள்."

"நான் ஏற்கனவே உன்னை எச்சரித்தேன் ஆனால் நீ என்னை மிக மோசமாக காயப் படுத்தினாய்",என்றான் வருத்தமாக.

        திவ்யா அருணை பற்றி தெரிந்து கொள்ளவும் அவன் கைபேசி எண்ணை வாங்கவும் சந்தோஷோடு  நெருங்கி பழகினாள்.அதில் மயங்கிய‌ சந்தோஷ் அவளிடம் தன் காதலை சொன்ன போது ,அவன் தோற்றத்தை கேலி செய்தும் தன்னை காதலிக்க அவனுக்கு எந்த‌ தகுதியும் இல்லை

என்று கூறியும் அவமானப் படுத்தினாள்.அந்த காயத்தில் இருந்து மீழ சந்தோஷுக்கு பல மாதங்கள் ஆகின.அவன் தாம் அழகில்லை, எந்த பெண்ணுக்கும் தம்மை பிடிக்காது என்ற தாழ்வு மனப்பான்மைக்கு நிரந்தரமாக தள்ளப் பட்டான்.அபர்னாவை சந்தித்த சில மாதங்கள் அவன் மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருந்தான் ஆனால் அவள் போன பிறகு மீண்டும் அவன் வாழ்க்கை சூனியம் ஆனது.

        திவ்யா சந்தோஷ் கையை பிடித்து அழுதாள்.

"உன்னை அன்று காயப் படுத்தியதுக்கு தான் இன்று நான் காயப்பட்டு நிற்கிரேன்.என்னை மண்ணித்து விடு ",என்று கெஞ்சினாள்.

சந்தோஷுக்கு சங்கடமாக இருந்தது.கடற்கரையில் இவர்களை கடந்து செல்லும் அனைவரும் ஒரு மாதரியாக‌ பார்த்து விட்டு சென்றனர்.

"சரி அழாதே நான் அருணோடு இது பற்றி பேசி பார்கிரேன்.ரொம்ப நேரம் ஆச்சு வா கிளம்பலாம் ",என்றான்.

         இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.சந்தோஷ் அபர்னாவை கவனிக்கவில்லை.

திவ்யா ஒரு கல் தடுக்கி கீழே விழ போனாள்.அவளை சந்தோஷ் தாங்கிப் பிடித்தான்.இதை பார்த்த அபர்னா கோவத்தில் கொப்பளித்தாள்.ஏனோ அவளால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.திவ்யா மீது கோவமும் பொறாமையும் ஏற்பட்டது.தன் உயிர் நண்பனோடு வேறு ஒரு பெண் இருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அவனை பிரிந்து தான் வாடிக் கொண்டு இருக்கும் போது இவன் அந்த கவலை கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு பெண்ணோடு சுற்றிக் கொண்டு இருக்கிரானே என்று தனக்குள்ளேயே புலம்பி கொண்டாள்.

என்னோடு நீ இருந்தால்!!Where stories live. Discover now