13.

2.1K 95 7
                                    

சந்தோஷ் அவன் பாடம் சம்பந்தமாக நோட்ஸ் எடுத்துக் கொண்டு இருந்தான்.அவன் கைபேசி முனங்கியது.ஒரு புதிய எண்ணில் இருந்து மெசேஜ் வந்து இருந்தது.எடுத்துப் பார்த்தான்.

"ஹாய் சந்தோஷ்.நான் அபர்னா "என்று அனுப்பப்பட்டு இருந்தது.

"இந்த அருணுக்கு இதே வேலையா போச்சு நேரம் காலம் தெரியாமல் விளையாடிகிட்டு இருக்கான்.இந்த மாதிரி பல முறை ஏமாத்தி இருக்கான் ",என்று சத்தமாக கூறினான்.

"டாய் மச்சான் நீ தான்னு தெரியும் போய் தூங்கு டா",என்று பதில் அனுப்பினான்.

சிறிது நேரம் கழித்து அந்த எண்ணில் இருந்து சந்தோஷுக்கு அழைப்பு வந்தது.சந்தோஷ் பதட்டம் ஆனான்.நடுங்கிய கைகளோடு போனை ஆன் செய்து "ஹலோ",என்றான்.

மறுமுனையில் அபர்னாவின் குரல் கேட்டு அவன் கண்கள் கலங்கின.

"எப்படி இருக்க அபர்னா",என்று கேட்டபோது கண்களில் நீர் வழிந்தது.

"நல்லா இருக்கேன் சந்தோஷ்.உன்னை சந்திச்சு சில விஷயங்களை தெளிவு படுத்தனும் நாளைக்கு எப்போதும் போல நடை பயிற்சி வந்து விடு",என்றாள் நடுங்கிய குரலுடன்.

"சரி வரேன்",என்றான்

"சரி குட் நைட் சந்தோஷ் நாளை பார்க்கலாம்",என்றாள் தயக்கமாக.

" குட் நைட்",என்று கூறி போனை அனைத்தான்.

இப்போது அதிகமாக படபடப்பு ஆனான்.ஒரு வேலை நிரந்தரமாக பிரிந்து விடலாம.் இனி உன்னை சந்திக்கவே மாட்டேன் என்று கூறுவாளோ என்று எண்ணும் போதே மனம் வலித்தது.

        அன்று காலை அபர்னா அறை மணி நேரம் முன்னதாகவே அந்த பூங்காவிற்கு வந்தாள்.சந்தோஷிடம் தன் காதலை சொல்லுவதர்க்கு முன் இரண்டு விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.ஒன்று ஏன் அந்த மெசேஜை அவன் அனுப்பினான்.இரண்டாவது கடற்கரையில் அவனோடு இருந்த பெண் யார்.

          

         பல நாட்கள் கழித்து அவனை பார்க்க போகும் பரபரப்பில் இருந்தாள் அபர்னா.அனால் சந்தோஷ் அவளை வெகு நேரம் காக்க வைக்கவில்லை.தூரத்தில் அவன் வருவதைப் பார்த்து கை அசைத்தாள் ஆனால் அவன் கவனிக்கவில்லை.அவன் சாலையை கடக்க முயற்சி செய்த போது எதிர் பக்கத்தில் இருந்து ஒரு நாய் குட்டி ஓடி வந்தது.அந்த பக்கம் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது. நாயின் மீது மோதாமல் இருக்க வண்டியை விரைவாக திருப்பினார் அதன் ஓட்டுனர்.

   

        கார் தனது நிலைப்பாட்டை இழந்து சாலையை கடந்து கொண்டு இருந்த சந்தோஷ் மீது மோதியது.சந்தோஷ் காற்றில் பறந்து சென்று காரின் கண்ணாடியில் மோதி கீழே விழுந்தான்.கார் கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது.சந்தோஷ் இரத்த வெள்ளத்தில் மிதந்தான்.

என்னோடு நீ இருந்தால்!!Where stories live. Discover now