12.

2K 99 1
                                    

சந்தோஷ் அபர்னாவை எதிர்பார்த்து தினமும் பூங்காவிற்கு சென்றான்.ஆனால் அவள் அங்கு வரவே இல்லை.அவள் கோவத்தில் கைபேசி எண்ணைக் கூட மாற்றிவிட்டாள்.எனவே இவனால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

          அபர்னாவின் நினைவுகள் அவனை வாட்டினாலும் அவன் தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்தான்.எனினும் அவன் எந்த தப்பும் செய்யவில்லை என்பதை அவளுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தான்.

       அபர்னாவோடு பழகும் போது அவள் அழகிய பேச்சையும் நல்ல குணத்தையும் கண்டு காதலில் விழுந்தான்.ஆனால் இப்போது சாகும் வரை அவள் நட்பு மட்டும் கிடைத்தாள் போதும் என்று தொன்றியது.தினமும் அவளை பார்த்து மனம் விட்டு பேசினால் போதும் என்று தோன்றியது.

           அன்று இரவு அபர்னாவால் படிக்க முடியவில்லை.சந்தோஷ் பற்றி ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தாள்.தனது டிராவில் இருந்த கௌத்தமுடைய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள்.

         அழகான படித்த பையன்.கண்களை மூடிக் கொண்டு சந்தோஷை நினைத்துப் பார்த்தாள்.அவன் குண்டான உருவம்,அழகிய முகம்,குழந்தை போன்ற சிரிப்பு மேலும் அவனோடு பேசும் போது அவளுக்கு ஏற்பட்ட மன நிறைவை நினைத்துப் பார்த்தாள்.டிராவை திறந்து கௌத்தமுடைய புகைப்படத்தை வைத்தாள்.தனது கைபேசியை எடுத்து இன்னும் டெலீட் பன்னாமல் வைத்து இருந்த சந்தோஷின் மெசேஜை ஒரு முறை படித்து பார்த்தாள்.அவள் இதழின் ஓரத்தில் புன்னகை மலர்ந்தது.

என்னோடு நீ இருந்தால்!!Where stories live. Discover now