8.

2.2K 105 15
                                    

சந்தோஷ் மறுநாள் நடை பயிற்சி செய்யும் பூங்காவிர்க்கு விரைவாக சென்றான்.ஆனால் அபர்னா அன்று வரவே இல்லை.அவள் கைபேசி எண்ணுக்கு பல முறை முயற்சி செய்தான் ஆனால் இனைப்பு கிடைக்கவில்லை.வெகு நேரம் ஆகியும் அவள் வராததால் ,அவள் அவன் மீது மிகுந்த

கோவத்தில் இருப்பதையும் அவனை பார்க்க அவள் விரும்பவில்லை என்பதையும் அவன் புரிந்து கொண்டான்.எப்படியும் ஒரு நாள் அவனை பார்க்க வருவாள் என்ற நம்பிக்கையுடன் தினமும் தவறாமல் அந்த பூங்காவிர்கு சென்றான்.

         அபர்னா சந்தோஷுடன் பேசி ஒரு மாதம் ஆனது.இந்த பிரிவு அவளை மிகவும் வேதனை படுத்தியது.பல ஆண்டுகள் இவளோடு பழகிய தோழிகளிடம் சொல்ல முடியாத விஷயங்களை கூட அவனோடு இயல்பாக பகிர்ந்து கொள்ள முடிந்தது.அது ஏன் என்று அவளுக்கு எப்போடும் புரிந்ததே இல்லை.அவள் சொல்லுவதை பொருமையாக கேட்டு

அறிவுரை கூறுவான்.எப்போடும் அவள் இதை தான் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த மாட்டான்.முடிவை அவள் இஷ்ட‌த்திக்கே விட்டு விடுவான்.

       எந்த ஒரு உறவாக இருந்தாலும் ஒருவர் மற்றவர் மீது தமது எண்ணங்களை தினிக்காமல் அவர் அவருக்கு ஒரு சுதந்திரம் இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்து கொண்டால் அந்த உறவு தெய்வீகமானது.அந்த உறவில் விரிசல் வராது.அப்படிப்பட்ட ஒரு தெய்வீகமான உறவை தான் சந்தோஷிடம் உணர்ந்தாள் அபர்னா.ஆனால் அது இப்பொது இல்லை என்றே ஆகி விட்டது.அதனால் நடந்ததை நினைத்து வருந்தாமல் அவனை காலப்போக்கில் மறந்துவிட முயற்சி செய்தாள்.
   
          ஒரு நாள் இரவு அபர்னா தனது அறையில் படித்துக் கொண்டு இருந்தாள்.அப்போது அவள் அப்பா உள்ளே நுழைந்தார்.

"அபர்னா என்னம்மா பறிச்சைக்கு படித்துக் கொண்டு இருக்கிறாயா?",என்றார் மெதுவாக.

"ஆமாம் பா",என்றாள் அமைதியாக.

"இது உனக்கு இறுதி ஆண்டு.மேற்க் கொண்டு என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்?",என்றார் பாசமாக.

"நான் இன்னும் முதிவு செய்யவில்லை அப்பா.ஒரு நல்ல வேலைக்கு போகனும்.பிறகு...........",என்று யோசித்தாள்.

"பிறகு என்ன திருமணம் தானே",என்றார் அவளை பார்த்தபடியே.

"திருமணத்துக்கு என்ன அப்பா அவசரம்.நங்கு சம்பாதிக்கனும்.ஒரு நல்ல நிலைமைக்கு வரனும்",என்றாள்.

"நீ யாரயாவது காதலிக்குறாயா அபர்னா",என்றார்.
அபர்னா திடுக்கிட்டாள்.

"அப்படி எல்லாம் எதுவும் இல்லை அப்பா",என்றாள் அதிர்ச்சியாக.

"சரி மா நீ படி",என்று கூறி வெளியே செல்ல எழுந்தார்.

"அப்பா ஒரு நிமிடம்.எதுக்கு அப்பா திடீர் என்று இதல்லாம் கேட்குரீங்க",என்றாள் ஆர்வத்துடன்.

"என் நண்பனிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.அவன் மகன் அமேரிக்காவில் எம்.பி.ஏ முதித்துவிட்டு ஒரு நல்ல வேலையில் இருக்கிரான்.நானும் அவனும் பேசிக் கொண்டு இருக்கும் போது உன்னை தன் மகனுக்கு பெண் கேட்டான்.உன் மனதில் என்ன இருக்கிற‌து என்று தெரியாமல் நான் எப்படி அவனுக்கு பதில் சொல்லுவது.அதான் கேட்டேன்",என்றார் அமைதியாக.
அபர்னா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

" நீ திருமணத்துக்கு பிறகு கூட வேலை பார்க்கலாம்.நங்கு சம்பாதிக்கலாம்.இது அந்த பையனுடைய புகைப்படம்.யோசித்து மெதுவாக உன் முடிவை சொல்லு.இது உன் வாழ்க்கை.நீ தான் முதிவு செய்யனும் ",என்று கூறி வெளியே சென்றார்.
          அபர்னாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.அவள் திருமணத்தை பற்றி எல்லாம் யோசிக்க கூட இல்லை. எனினும் அவன் எப்படி இருப்பான் என்று பார்க்க அவள் ஆர்வம் தூண்டியது.அந்த கவரை பிரித்து உள்ளே இருந்த புகைப்படத்தை பார்த்தாள்.
          ஒரு அழகான இளைஞன் சிரித்துக் கொண்டு இருந்தான்.வசிகரமான சிரிப்பையும் காந்தம் போன்ற கண்களையும் பார்த்த அபர்னா மெய் மறந்து போய் இருந்தாள்.



என்னோடு நீ இருந்தால்!!Where stories live. Discover now