4.

2.2K 108 4
                                    

சந்தோஷும் அபர்னாவும் சந்தித்து ஒரு மாதம் ஆகிவிட்டது.இருவரும் நேரில் மட்டும் இல்லாமல் தொலைபேசியிலும் பேசும் அளவிற்க்கு நல்ல நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.சந்தோஷ் மிக மகிழ்ச்சியாக இருந்தான்.அபர்னாவின் தோழிகளும் சந்தோஷோடு சகஜமாக பழகினார்கள்.

இதுவரை அவனை கிண்டல் செய்து  காய படுத்திய பெண்களுக்கு நடுவில் இப்படிபட்ட நல்ல பெண்களும் இருக்கிரார்கள் என்று எண்ணி நிம்மதி கொண்டான்.

ஆனால் இந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் வெகு நாட்கள் நீடிக்கவில்லை.

       ஒரு நாள் மதியம் சந்தோஷ் தனது அறையில் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தான்.

"ஹாய் டா.என்ன பன்னர?",என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் அருண்.

"வா டா எங்க ரொம்ப நாளாக உன்னை பார்கவே முடியவில்லை"

"ஒரு வேலையாக‌ ஊருக்கு போய் இருந்தேன் டா.சரி நீ எப்படி இருக்க.இன்னும் அந்த பொன்னு கூட பேசிக் கொண்டு தான் இருக்கிராயா?"

"ஏன் அப்படி கேட்கிராய்.உன்னைப் போல் அவங்களும் எனக்கு நல்ல பிரண்டு"

"சரி அந்த பொன்னு நம்பர் குடு டா.ஒரு விஷயம் பேசனும்",என்றான் இயல்பாக.

சந்தோஷின் முகம் மாறியது.

"அவங்ககிட்ட கேட்டுட்டு கொடுக்கரேன் டா",என்றான் தயக்கமாக.

"உன்கிட்ட என்ன கேட்குரது நானே பாதுக்குரேன்",என்று கூறி சந்தோஷின் கைபேசியை எடுக்க முயற்சி செய்தான்.

சந்தோஷ் கோவத்தின் உச்சிக்கு சென்றான்.

"நீ நினைப்பதை போன்ற பெண் அவங்க இல்லை.எல்லா பெண்களிடமும் விளையாடுவதை போல் அவ‌ங்களிடம் நடந்து கொண்டால் நான் என்ன செய்வேன் என்று எனகே தெரியாது.இங்கு இருந்து போய் விடு",என்றான் ஆவேசமாக.

"உனக்கு ஏன் டா இவ்வளவு கோவம் வருது.நீ அந்த பொன்ன காதலிக்கிறாய?",என்றான் அருண் கோவமாக.

"ஆமாம் டா.ஐ லவ் அபர்னா",என்று கத்தினான்.

அருண் அதிர்ச்சி அடைந்தான்.எதுவும் பேசாமல் அங்கு இருந்து வெளியேரினான்.

அருண் சென்ற பிறகு சந்தோஷ் சோகமாக கதவயே பார்த்துக் கொண்டு இருந்தான்.அருணை டிட்டியதை எண்ணி வருந்தினான்.என்னதான் அவன் பெண்கள் இடத்தில் மோசமாக நட‌ந்துக் கொண்டாலும் அவன் சந்தோஷுக்கு ஒரு நல்ல நண்பனாக தான் இருந்தான்.அவனிடம் உடனே மண்ணிப்பு கேட்டு அபர்னா பற்றி புரிய வைக்க வேண்டும் என்று எண்ணி வெளியே வந்தான்.கதவு அருகில் ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.அதிர்ச்சியில் உறைந்து போனான்.

என்னோடு நீ இருந்தால்!!Where stories live. Discover now