14.

2.1K 99 2
                                    

அபர்னா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.பூங்காவிலிருந்து வெளியே ஓடி வந்தாள்.சாலையை கடந்து மறுபக்கம் செல்லுவதர்க்குள் யாரோ ஒருவர் சந்தோஷை தனது காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.இப்போது அந்த இடத்தில் கூட்டம் கூடியது.கூட்டத்தை விலக்கி உள்ளே சென்று பார்த்தாள்.சாலையில் நொறுங்கிய கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்தன.சந்தோஷின் இரத்தம் சாலை முழுவதையும் நனைத்து இருந்தது.

   

           கூட்டத்தில் ஒருவர் "பாவம் அந்த பையன் யாருனு தெரியல .தலையில பலமான அடி.ஆஸ்பத்தரி போர வரைக்கும் உயிர் பிழைப்பானானு தெரிய‌ல",என்றார் சோகமாக.அதை கேட்ட அபர்னாவின் உடல் நடுங்கியது.கதறி அழ தொடங்கினாள்.

         சந்தோஷை எந்த மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர் என்று அவளுக்கு தெரியவில்லை.வீட்டுக்கு போக மனசு இல்லாமல் மறுபடியும் பூங்காவிர்கு சென்றாள்.அவனுக்கு என்ன ஆனதோ என்பதை எண்ணி அவள் மனம் பதறியது.அவள் கண்களில் நீர் கசிந்து கொண்டே இருந்தது.எவ்வளவு நேரம் அங்கு அமர்ந்து இருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.அவள் கைபேசி முனங்கிய போது தான் தாம் அங்கு வெகு நேரம் இருப்பதை உணர்ந்தாள்.

கண்களை துடைத்துக் கொண்டு "ஹலோ",என்றாள்.

"எங்கம்மா இருக்க.இவ்வளவு நேரம் ஆச்சு ஏன் இன்னும் நீ வீட்டுக்கு வரலை",என்றார் அப்பா கோவமாக.

"இல்லை அப்பா பழைய பிரண்டை பார்த்தேன்.அவ கூட பேசிகிட்டு இருந்ததுல நேரம் ஆயிரிச்சு",என்று பொய் சொன்னாள்.

"நல்லா பேசனீங்க போ நேரத்தை கூட பார்க்காமல்.சரி ஒரு சந்தோஷமான விஷயம்.கௌத்தம் இந்தியாவுக்கு வந்தாச்சு.இன்னும் ஒரு மணி நேரத்துல நம்ம வீட்டுக்கு வரான்.நீ வேறு எங்கேயும் போகாமல் நேராக வீட்டுக்கு வா", என்றார் கண்டிப்பாக.

அபர்னா சரி என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

என்னோடு நீ இருந்தால்!!Where stories live. Discover now