9.

2.1K 101 1
                                    

மறுநாள் காலை அபர்னா கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள்.தன் அறையை விட்டு வெளியே வந்த போது அவள் அப்பா செய்தித்தாள் படித்துக் கொண்டு இருந்தார்.

"அப்பா.நேற்று அந்த பையன் புகைப்படம் பார்த்தேன்.அழகாய் இருக்கிறான்.ஆனால் வெறும் தோற்றத்தை வைத்து எப்படி அவனை பிடித்து இருக்கிறதா இல்லையா என்று சொல்லுவது.அவனோடு பேசி பார்த்தால் தான் எனக்கு அவன் பொருத்தமானவனா என்று முடிவு செய்ய முடியும்,"என்றாள் தெளிவாக.

"அதுக்கு என்னம்மா கௌத்தம் அடுத்த மாதம் இந்தியா வருகிரான்.நீ அவனை சந்திக்க எற்பாடு செய்கிரேன்",என்றார் சிரித்துக் கொண்டே.

"சரி பா நான் கல்லூரிக்கு போய் வருகிறேன்",என்றாள்.

"அபர்னா ஏன் நீ இப்போ எல்லாம் நடை பயிற்சி செல்வதே இல்லை",என்றார் யோசனையாக.

"அது வந்து பா.........பரிச்சைக்கு இரவெல்லாம் முழித்து படிப்பதால் காலையில் முழிக்க முடியவில்லை.அதான்",என்று தடுமாறினாள்.

"சரி மா நீ போயிட்டு வா",என்றார் அவளை பார்த்தபடியே.

அபர்னா கௌத்தம் பற்றி இன்னும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவில்லை.அவனை தாம் சந்திப்பதாக எடுத்த முடிவு சரியா தவறா என்று கூட அவளுக்கு தெரியவில்லை.சந்தோஷோடு சண்டை வரவில்லை என்றால் முதலில் இந்த விஷயத்தை அவனிடம் தான் சொல்லியிருப்பாள்.அவன் ஒரு தெளிவான ஆலோசனை கூறி இருப்பான்.பழகிய சில நாட்களிலேயே அவனை சார்ந்து இருக்கும் படி செய்து நீங்கா நினைவுகளை தந்து விட்டு சென்றதர்க்கு சந்தோஷை இன்னும் அதிகமாக வெறுத்தாள்.

அன்று மதியம் பரிச்சையை நன்றாக எழுதிய மகிழ்ச்சியில் அபர்னாவும் தோழிகளும் கடற்கரைக்கு சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வரலாம் என்று முதிவு செய்தனர்.

அந்த அலையையும் அங்கு வரும் காதலர்களையும் ரசித்தபடியே தன் தோழிகளோடு பேசிக் கொண்டு இருந்தாள்.

அபர்னா தண்ணீரில் விளையாட மறுத்ததால் அவள் தோழிகள் மட்டும் அலையில் விளையாட சென்றனர்.அபர்னா கரையில் அமர்ந்தபடியே அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

யாரோ அவள் பின்னால் நடந்து செல்லும் சத்தம் கேட்டு அபர்னா திரும்பி பார்த்தாள்.ஒரு காதல் ஜோடி அவளை தாண்டி சிறிது தூரம் தள்ளி சென்று அமர்ந்தது.அந்த பெண் மிக அழகாக இருந்தாள்.அந்த ஆண்ணின் முகத்தை பார்த்த அபர்னா வியப்பில் ஆழ்ந்தாள்.

என்னோடு நீ இருந்தால்!!Where stories live. Discover now