11.

2K 103 2
                                    

அபர்னா புலம்பிக் கொண்டு இருப்பதை பார்த்த அவள் தோழி அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.

"என்ன டீ தனியா பேசிகிட்டு இருக்க",என்றாள் சிரித்துக் கொண்டே.

அபர்னா நடந்ததைக் கூறினாள்.

தோழி பொருமையாக கேட்டாள்.

"சந்தோஷ் என்னை காதலிக்குறான்.எனக்கு தவறான மெசேஜ் அனுப்புனான்.அவனுடன் இனி நான் பேச மாடேன் என்று சொன்ன.இப்போ அவன் யார் கூட போன உனகென்ன",என்றாள் சிரித்தபடியே.

"பேச மாட்டேன் என்று சொன்னது உன்மை தான் ஆனால் அவன் நட்பை பிரிந்து  நான் எவ்வளவு வருத்தப் படுகிரேன் என்று எனக்கு தான் தெரியும்.அவன் அந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் கடற்கரையில் ஒரு பெண்ணுடன் சுற்றிக் கொண்டு இருக்கிறான்.",என்றாள் வெறுப்பாக.

"அவன் மேல் உனக்கு இவ்வளவு கோவம் வருகிறது என்றால் இரண்டே விஷயமாக தான் இருக்கும்",என்றாள் தோழி அமைதியாக.

"என்ன டி அது",என்றாள் அபர்னா ஆர்வமாக.

"ஒன்று; அவன் நட்பு உனக்கு தேவை.அவனுடன் பேச உன் வறட்டு கௌரவம் தடுக்கிறது.அவன் மேல் கோவம் இருப்பதை போல் நடிகிறாய்.அவனே வந்து மண்ணிப்பு கேட்டு உன்னிடம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்.

இரண்டு; நீ உன்னை அறியாமல் அவனை காதலிக்க துவங்கிவிட்டாய்",என்றாள் தோழி மெதுவாக.

"இதில் எதுவாக இருக்கலாம் என்று நீ நினைகிறாய்",என்றாள் அபர்னா பயத்துடன்.

"எனக்கு இரண்டுமே என்று தான் தோன்றுகிறது",என்றாள் தோழி குறும்பாக.

        அபர்னா மறுக்க வாய் எடுத்த போது தோழி அவளை தடுத்தாள்.

"எதுவாக இருந்தாலும் பரிச்சைக்கு பிறகு முடிவு செய்யலாம்.பரிச்சையின் போது மனதை அலைபாயவிடதே.இப்போது வா வீட்டுக்கு போகலாம்",என்று கூறி மற்ற தோழிகளை அழைக்க சென்றாள்.

அபர்னா குழப்பத்துடன் அவள் தோழியை பின் தொடர்ந்தாள்.

என்னோடு நீ இருந்தால்!!Where stories live. Discover now