3.

2.4K 118 3
                                    

சந்தோஷ் தன் நண்பன் அருணோடு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

"டாய் மச்சான் அங்க பாருடா அந்த பொன்னு எவ்வளவு அழகா இருக்கா",என்றான் அருண் அந்த பெண்னை ரசித்தபடியே.

சந்தோஷ் திரும்பி பார்தான்.அவளும்

அவனை பார்த்து சிரித்தாள்.பின் அங்கு இருந்து எழுந்து சந்தோஷின் மேஜையை நோக்கி வந்தாள்.

"டாய் அந்த பொன்னு இங்க வருது டா",என்றான் அருண் ஆச்சிரியமாக.

       "ஹாய் சந்தோஷ்",என்றாள் இனிமையாக.

"ஹாய் அபர்னா.என்ன இந்த பக்கம்.இது எங்க காலேஜ் ஏரியா",என்றான் பெருமையாக.

"பிரண்டு வீடு இங்க தான் இருக்கு.சும்மா ஒரு அவுட்டிங் வந்தோம்."

"சரி சந்தோஷ் நான் கிளம்புகிரேன்.நாளைக்கு பார்க்கலாம்",என்று கூறி புறப்பட்டாள்.

அருணுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

"அந்த பொன்ன உனக்கு எப்பிடி டா தெரியும்?"

"தினமும் நடை பயிற்சி செய்யும் போது அவளும் வருவாள்.அப்படி தான் பழக்கம்",என்றான் அமைதியாக.

"ஏன் டா என்னை அவங்களிடம் அறிமுகம் செய்யவில்லை",என்று செல்லமாக கோவித்துக் கொண்டான்.

"அடுத்த முறை கண்டுப்பா செய்யுரேன் டா",என்றான் சந்தோஷ் தயக்கமாக.

அருணுடைய ஆர்வம் சந்தோஷுக்கு பயத்தை தந்தது.அருண் ஒரு நல்ல நண்பன் என்றாலும் அவன் தன் அழகிய தோற்றத்தை வைத்து பல பெண்களோடு நெருங்கிப் பழகுவான்.அவன் பொழுதுபோக்காக பழகுவதை காதல் என்று புரிந்து கொண்டு ஏமாந்து போகும் பெண்கள் கூட்டம் அதிகம்.எந்த பெண்ணும் அவன் பார்வையிலும் பேச்சிலும் அடிமை ஆகி விடுவாள்.பின்பு அவன் தம்மை காதலிக்கவில்லை என்று தெரிந்தவுடன் மிகவும் நொந்து போவாள்.

இந்த நிலைமை அபர்னாவுக்கும் வந்து விடுமோ என்று எண்ணி வருந்தினான்.

என்னோடு நீ இருந்தால்!!Donde viven las historias. Descúbrelo ahora