15.

3.8K 183 69
                                    

       அபர்னாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.உடனே தன் தோழிக்கு போன் செய்து நடந்ததை கூறி அழுதாள்.

"அபர்னா அழாதே. ஒன்னும் ஆயிர்க்காது அவனுக்கு.கவலை படாதே.பூங்காவுக்கு பக்கத்துல இருக்கிற மருத்துவமனைக்கு தான் கூட்டீட்டு போயிர்ப்பாங்க.நான் அந்த இடத்தில் இருக்கும் எல்லா மருத்துவமனைக்கும் போன் பன்னி விசாரிக்குரேன்.சந்தோஷ் பற்றி தெரிந்தால் உனக்கும் தகவல் சொல்லுரேன்.நீ முதலில் வீட்டுக்கு போ",என்றாள் தோழி ஆறுதலாக.

         அபர்னாவால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.அவள் எண்ணம் முழுவதிலும் சந்தோஷ் நிறைந்து இருந்தான்.

"வீட்டில் எதையும் காட்டிக் கொள்ளாதே.கௌத்தமோடு இயல்பாக பேச முயற்சி செய்.திருமணம் செய்து கொள்ளும் மன நிலைமையில் நான் இல்லை எனக்கு ஒரு 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று அவனிடம் கூறு.கண்டிப்பாக மறுக்க மாட்டான்",என்று தோழி தைரியம் ஊட்டினாள்.

அபர்னா மெதுவாக எழுந்து வீட்டுக்கு கிலம்பினாள்.

8 மாதங்களுக்கு பிறகு.......

       அபர்னா சந்தோஷை சந்தித்து 8 மாதங்கள் ஆகி விட்டன.சந்தோஷிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.அவன் உயிரோடு தான் இருக்கிறான்.அவனை அவன் பெற்றோர் சொந்த ஊருக்கே கூட்டி சென்றனர் என்னும் தகவலை அவள் தோழி மூலமாக தெரிந்து கொண்டாள்.

        அவன் வருவான் என்று எதிர்பார்த்து தினமும் நடை பயிற்சி சென்றாள் அபர்னா.ஆனால் அவன் வரவே இல்லை.மனம் தலர்ந்து போய் இனி அவன் வரவே மாட்டான் என்று முடிவு செய்தாள்.அவளின் பெற்றோர் கௌத்தம் பற்றி என்ன முடிவு செய்து இருக்கிறாள் என்று கேட்க தொடங்கிவிட்டனர்.கடைசி முறையாக அன்று அந்த பூங்காவிர்க்கு சென்றாள்.வழக்கம் போல அன்றும் அவன் வரவில்லை.தன் வாழ்வில் மிகவும் நேசித்த ஒருவரை இனி பார்க்கவே முடியாது என்ற உண்மை நெருப்பை போல் சுட்டு எரித்தது.என் காதலை அவனிடம் சொல்லும் பாக்கியம் கூட எனக்கு கிடைக்கவில்லையே.கடைசியாக அவன் முகத்தை பார்க்கும் வாய்ப்பு கூட எனக்கு கிடைக்கவில்லையே என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.

 

        சந்தோஷ் பற்றிய யோசனையில் மூழ்கி இருந்தாள்.திடிர் என்று அவள் தோளை யாரோ தொட்டதை உணர்த்து சட்டென்று பயந்து போனாள்.நிமிர்ந்து பார்த்தாள்.சந்தோஷ் சோர்வாக சிரித்துக் கொண்டு இருந்தான்.

லேசான தாடியுடன் மிக சோர்வாக இருந்தான்.இப்போது இன்னும் குண்டாக தெரிந்தான்.

அபார்னா அதிர்ச்சியில் வாய் அடைத்துப் போனாள்.இது கனவா இல்லை நிஜமா என்று யோசித்தாள்.

"ஹாய் அபர்னா. எப்படி இருக்க.என்னை நியாபகம் இருக்கா.நான் சந்தோஷ் ",என்றான் சோகமாக.

அபர்னாவுக்கு கண்களில் நீர் பெருகியது.

"எங்க டா போன இவ்வளவு நாளா.எனக்கு உயிரே போயிர்ச்சு டா.நியாபகம் இருக்கானா கேட்குற",என்று கூறி அவனை அடித்தாள்.

சந்தோஷ் குழப்பத்துடன் அவளை பார்த்தான்.

         

       அபர்னா அவனை கட்டிப் பிடித்து"இனி என்னை விட்டு எங்கேயும் போகாதே.ஐ லவ் யு சந்தோஷ்",என்றாள் அழுது கொண்டே.

சந்தோஷ் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான்.

அவள் கையை பிடித்து சத்தியமாக போக மாட்டேன் என்றான்.

என்னோடு நீ இருந்தால்.உயிரோடு நான் இருப்பேன் என்று அவள் காதோரத்தில் கூறி சிரித்தான்.அபர்னா அவன் தோளில் சாய்ந்தாள்.

                                                (முற்றும்)

Note: Hello readers.Good day to all.Hope you enjoyed this story.Give me your valuable comments and votes.Thank you.

என்னோடு நீ இருந்தால்!!Where stories live. Discover now