7.

2.1K 102 2
                                    

அபர்னா சென்று சில நிமிடங்கள் கழித்து அருண் மீண்டும் சந்தோஷ் தங்கி இருக்கும் அந்த அடுக்கு மாடி வீட்டுக்கு வந்தான்.அவன் வண்டி சாவியை மறந்து சந்தோஷ் அறையில் வைத்தது கார் அருகில் சென்ற போது தான் நியாபகம் வந்தது.கதவை தட்டினான்.பதில் இல்லை.மீண்டும் தட்டினான்.யாரும் வரவில்லை.இப்போது பலமாக தட்டினான்.சிறிது நேரம் கழித்து கதவு திறக்கப்பட்டது.சந்தோஷின் முகத்தை பார்த்து அருண் பயந்து போனான்.

        

         கண்கள் சிவந்து, முகம் வீங்கி கன்னங்கள் கண்ணீரில் நனைந்து போய் இருந்தன.

"ஏன் டா இப்படி இருக்க.என்ன டா ஆச்சு",என்றான் பதட்டமாக.

சந்தோஷால் பேச முடியவில்லை.

"இங்க வா.மொதல்ல இந்த தண்ணிய குடி",என்றான் பாசமாக.

சந்தோஷ் எதுவும் பேசாமல் தண்ணீரை குடித்தான்.

"இப்போ சொல்லு என்ன ஆச்சு",என்றான் அமைதியாக.நடந்ததை கூறினான் சந்தோஷ்.

"அப்போ நீ அபர்னாவை நிஜமாகவே காதலிக்கவில்லையா",என்றான் அதிர்ச்சியாக.

"இல்லை டா.அவள் நட்பு எனக்கு கிடைத்ததே பெரிய பாக்யமா நினைகுரேன் டா.அவள் ஒரு தேவதை.அவள் எப்படி என்னை போல் ஒருவனை காதலிப்பாள்.",என்றான் சோகமாக.

"சரி ஒரு வேலை அவள் உன்னை காதலித்தால் என்ன செய்வாய்"

சந்தோஷ் வெட்கத்தில் தலையை குனிந்தான்.

"டாய்ய்....என்ன டா வெட்கப் படுர அப்போ உனக்கும் ஆசை இருக்கு

ஆனா வெறும் நட்பு மட்டும் தான் என்று உன்னையே நீ ஏமாதிக்கிட்டு இருந்திர்க",என்றான் செல்லமாக அவன் தோழை தட்டி.

"சரி போய் முகம் கழுவி விட்டு வா.இதுக்கு என்ன செய்யலாம் என்று யோசிப்போம்",என்றான்.

        சந்தோஷ் முகம் கழுவி விட்டு வெளியே வந்த போது அருண் கையில் தனது கைபேசி இருப்பதை பார்த்தான்.

"என்ன டா பன்னர",என்று சந்தேகமாக கேட்டான்.

"உன் ஆளுக்கு ஒரு சூப்பர் மெசேஜ் அனுபிர்க்கேன் டா. அதை அவள் படித்ததும் நாளைகே உன்னிடம் தன் காதலை சொல்லுவாள் பாரேன்",என்றான் பெருமையாக.

சந்தோஷ் வேகமாக தனது கைபேசியை வாங்கி அது என்ன மெசேஜ் என்று பார்த்தான்.

"டாய் அதை நான் டெலீட் செய்து விட்டேன் டா",என்றான் சிரித்துக் கொண்டே.

"அறிவு இருக்கா டா உனக்கு.அவள் ஏற்கனவே என் மீது கோவமாக இருக்கிறாள் இப்போது இது வேறா.",என்று கூறி தலையில் அடித்துக் கொண்டான் சந்தோஷ்.

அந்த மெசேஜை தாம் அனுப்பவில்லை என்று கூற அபர்னாவின் எண்ணை அழைத்தான்.

அபர்னா கூறியதைக் கேட்டு அதிர்ந்து போனான்.

என்னோடு நீ இருந்தால்!!Where stories live. Discover now