Episode 27

531 8 24
                                    

அனு: நா.... நான்... பேசாம ஊருக்கு போயிடுறேன்

இதை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்....

கேட்டவர்கள் ஒருசேர லூசா நீ என்றனர்  கோரஸக...

அனு :இல்லை யோசிச்சித்தான்  சொல்றேன்.... எனக்கு வேற வழி தெரியல தேவையில்லாம எதுக்கு இவ்ளோ குழப்பம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... நான்... நான்.... வீட்டுக்கு போறேன்.... என்றாள் அழுதுகொண்டே..... 

கிறிஸ்ட்டி : ஹய்.... இங்க பாரு டி இப்போ ஏன் இப்டி நீ அழுகுற.... உன் மேல ஒரு தப்பும் இல்லை .... நீ எதுக்காக ஊருக்கு போகணும்....

ஸ்ரீ :ஆமா.... நீ.. நீ... போக கூடாது.... இங்க பாரு உனக்காக தான் இவ்ளோ பொறுமையா போயிட்டு இருக்கேன் இல்லனா...

தாரு :இல்லனா என்ன பண்ணிருப்பா???  இன்னும் சண்டை பெருசா போயிருக்கும்....

கிறிஸ்ட்டி :என்ன சொல்ற தாரு.... ஸ்ரீ பண்ணதுல என்ன தப்பு இருக்கு.... நான் பண்ணனும்னு நினைச்சதை அவரு பண்ணிருக்காரு... இதுல என்ன தப்பு இருக்கு... என்னை கேட்ட அந்த வினய்க்கு நாலு அறை கூட சேர்த்து கொடுத்துருக்கலாம் தப்பு இல்லை....

தாரு : சரி.. சார் பண்ணது தப்பு தான் நான் அதை கண்டிப்பா ஒத்துக்குறேன் ஆன அதுக்கு ரியாக்ட் பண்ணவேண்டியது யாரு???  ஒன்னு சம்மந்த பட்டவ... இல்லனா கூட இருக்குற நாங்க... இதுல நீ இன்வோல்வ் ஆகிருந்த கூட இவ்ளோ சீரியஸ் ஆகிருக்காது ஆன இப்போ பாரு எல்லாருக்கும்மே ஒரு ஒரு பிரச்சனைல இருக்கோம்ல....

ஸ்ரீ :அதுக்கு என்னாலதான் சொல்றியா... உனக்கு தெரியாத அனு பத்தி  அவளுக்கு இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ண தெரியாது அவளே ஒரு குழந்தை மாதிரி ஒரு பொண்ணுகிட்ட இப்படி  தான் நடந்துப்பானா அந்த வினய்... அவனலாம் சும்மா விடவே கூடாது.....

அப்போது தான் அனைவருக்கும் அர்ஜுனின் மௌனம் சிறிது கலக்கத்தை தர.... அவனது குழப்பத்தின் காரணம் மற்றவர்களுக்கு புரிந்தது...

தாரு :அர்ஜுன்.... டேய்....

அர்ஜுன் :ம்ம்ம்... என்ன ஆச்சி.... என்ன பேசிட்டு இருந்திங்க.... சாரி கவனிக்கல ...

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 30, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

சொல்லத்தான் நினைக்கிறேன் 😊Where stories live. Discover now