டிங் டாங் - 1

1.9K 29 4
                                    

🎶

ஒரு காதல் கடிதம் விழி போடும் 
உன்னை காணும் சபலம் வர கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

🎶

மெல்லிய ஒலியில் காதுக்கு இதமாக இசையும், கடந்த அரை மணி நேரமாகக் கண்களுக்குக் குளுமை அளிக்கும் விதமாகக் காட்சியளித்த அந்த பச்சை மரம், செடி, கொடிகளும் அவன் கண்களுக்கு இதமாய் இருந்தது. இவற்றை ஒரு படி மேலே கொண்டு செல்ல கால் முளைத்த காற்று, அவன் நின்றிருந்த ரயிலை விட வேகமாக வீசி தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 

கடையநல்லூரைத் தாண்டிய பொழுது துவங்கிய இந்த இளங்காற்று இப்பொழுது வரை கண்களை மூட விடாமல் அதன் அழகை ரசிக்க வைத்தது. காணும் காட்சி எங்கும் வயல்கள், தென்னை, வாழை, சோளம் என மொத்தமும் பச்சை நிறம் தான்... 

அதில் ஆங்காங்கு கடமையே கண்ணாக தலையை தூக்காமல் வயலில் பணிபுரியும் விவசாயிகள், ஒரு நீண்ட குச்சியில் கட்டிவிட்டிருந்த வெள்ளை துணி, வேர்வையில் நனைந்திருந்தவர்களுக்கு வீசியது போன்ற அழகிய காட்சி... மறு புறம் பறவைகள் கிடைத்த இரையை அள்ளிக்கொண்டு பறக்கும் காட்சி.

🎶

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி
என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

🎶

முதல் முறை வருகிறான் செங்கோட்டைக்கு. குற்றாலம் சென்றது உண்டு ஆனால் அப்பொழுதெல்லாம் முழு உறக்கத்திலோ அல்லது நண்பர்களுடன் ஆட்டம் போட்டுக்கொண்டு நெடுஞ்சாலையில் சென்றது. இப்பொழுதே முதல் முறையாக இந்த சொர்க பூமியின் அழகை ரசிக்க முடிந்தது... என்ன கேரளா... மைசூர்...? இது தான் சொர்கம் என்று தோன்றியது. 

ரயிலின் வேகத்தில் இரு பக்கமும் இருந்த இளம் பயிர்கள் காற்றில் ஆடிய துணி போல் ஒன்றாக ஆடியது. அந்த வயல்களுக்குப் பாதுகாப்பாக இருப்பது போன்ற பிரமை தந்தன தூரத்தில் தெரிந்த மலைகள். நெல் வாசனை நாசியைத் துளைத்து புத்துணர்ச்சியை வில்லாய் இறைத்தது. 

டிங் டாங் காதல்Where stories live. Discover now