டிங் டாங் - 17

374 28 3
                                    

நேரம் மாலை ஐந்தரையை தாண்டி சென்றிருந்தது. ஆனால் அங்கிருந்த கூட்டம் மட்டும் இன்னும் நகராமல் அப்படியே இருந்தது. காவல்துறையினரின் வாகனமும், பல அரசு வாகனங்களும் வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருக்க வைஷ்ணவியும் ஷெர்லினும் ஒரு காவல் அதிகாரியின் பின்னே அவர் செல்லும் இடமெல்லாம் அலைந்துகொண்டிருந்தனர். 

அங்கு வேலை பார்க்கும் அனைவரும் இடத்தில் இருந்தனர். சுந்தர் முதல் சித்தாள், கொத்தனார் என அனைவருக்கும் வரிசையாக மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். அனைத்தையும் ஒரு ஓரமாய் நின்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சுப்பிரமணிக்கு தான் மனதில் பெரிய பாரம் குடிகொண்டது. 

மகன் எவ்வளவு ஆசையாக துவங்கியது இப்படியா வந்து நிற்க வேண்டும்? அவன் பொறுப்பில் விட்டது, அவன் நண்பர்கள், பங்குதாரர்கள் வந்து கேட்டால் என்ன பதில் கூறுவது... இனி இதற்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று சண்டையிட்டால்?

இதற்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று சண்டையிட்டால் என்ன கூறி சமாளிப்பது என குழப்பங்களும் கேள்விகளும் சரி விகிதத்தில் அவரை கிறங்கடித்தது. இதில் மஹாலக்ஷ்மி தொடர்ந்து கைபேசியில் அழைத்துக்கொண்டு இருந்தார். மனைவியின் பதட்டம் புரிந்தாலும் பதில் என்ன பேசுவதென்று தெரியாமல் தவிர்த்துவந்தார். 

"வைஷு என்னடி உன் ஆளு கொலை பண்ற அளவு பெரிய ஆளா என்ன?" 

காதை கடித்த ஷெர்லினை பார்த்து முறைத்த வைஷ்ணவி, "ஓங்கி ஒரு மிதி மிதிச்சா குத்தால அருவில தான் போய் விழுவ" 

"நீ கோவப்படுத்த எல்லாம் கூட்டி கழிச்சு பாத்தா நீயும் ஒடந்தையா இருப்பியோனு எனக்கு சந்தேகம் வருது" 

"ச்ச ச்ச... சாதாரண சாப்பாடுக்கே முதல உன்ன வச்சு தான் டெஸ்ட் பண்ணுவேன், இதுல சொல்லவா வேணும்? எப்படி எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணலாம், எங்க அறுத்த சட்டுனு உசுரு போகும்னு எல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு தான் அடுத்தவன்" - வைஷ்ணவி 

டிங் டாங் காதல்Where stories live. Discover now