டிங் டாங் - 15

377 29 4
                                    




நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி

பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி

காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்

என்றும் அதிரடியாக துவங்கும் அவன் காலை இன்று அவன் மனதை வருடம் இளையராஜாவின் இசையில் நீந்த இதமான மன நிலையோடு தான் கண்களை திறந்தான். தலையை திருப்பி வைஷ்ணவி அறையை ஜன்னல் வழியாக கண்டான்.

வழக்கம் போல ஒலியின் வீரியம் குறையவில்லை, அந்த மொத்த தெருவுக்கும் கேட்கும்படி தான் இருந்தது ஆனால் மெல்லிய இசையும், யேசுதாஸ், சித்ரா இருவரின் குரலில் குயில்களின் ராகமாகவே ஒலித்தது.

வா வா
அன்பே அன்பே

காதல் நெஞ்சே
நெஞ்சே

வைஷ்ணவி இரவு உடையில் அடங்காமல் பரந்த கூந்தலை கொண்டையிட்டு மாடியை குச்சி விளக்கமாறை வைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தாள்.

"அந்த செடிக்கு பின்னாடி இருக்குறதெலாம் நல்லா தூத்துவிடு. என்ன வேலை செஞ்சாலும் உன் கூட ஒரு ஆள் இருந்ததே இருக்கணுமா?"

காலையிலே அன்னையின் அழகிய சொற்களை கேட்டுக்கொண்டே வேலை செய்திருந்த வைஷ்ணவி முகத்தில் எப்பொழுதும் இருக்கும் எரிச்சல் இல்லை.

அன்னை சொல்லியவை யாவையும் முகம் சுளிக்காமல் செவ்வனே செய்பவளாய் பார்த்து மஹேஸ்வரிக்கே அதிகாரம் தூள் பறந்தது. வேலை செய்தவள் தலையை தூக்கி அன்னையை சில நொடிகள் கண் சிமிட்டாமல் பார்த்தாள்.

"ஏன் மா இன்னைக்கு நீ அழகா இருக்கியே" மகளின் கேள்வியில் செய்த வேலை கூட அப்படியே நின்றது மஹேஸ்வரிக்கு.

டிங் டாங் காதல்Where stories live. Discover now