டிங் டாங் - 8

435 31 11
                                    

வேலையில் வைஷ்ணவியும் ஷெர்லினும் சேர்ந்து இன்றோடு ஒரு மாதம் மேல் ஆகியது. பெரிய ப்ராஜெக்ட் ஆதலால் குற்றாலத்திலே ஒரு வீட்டை பிடித்து தங்கிவிட்ட சுந்தர் தினமும் காலையிலிருந்து மாலை வரை வேலையாட்கள் அனைவரும் கிளம்பி செல்லும் வரை உடன் நின்று ஒவ்வொரு வேலையையும் பார்த்துக்கொண்டே இருப்பான்.

இந்த ஒரு மாதத்தில் சுந்தரின் அசிஸ்டன்ட் என்ஜினீயர் சார்லஸ் என்னும் ஒருவன் உதவிக்கு வந்திருக்க வைஷ்ணவி, ஷெர்லின் இருவரையும் நிற்க கூட விடாமல் இருவரையும் மாறி மாறி வேலை வாங்கிக்கொண்டே இருந்தான் சுந்தர் சார்லஸ் மூலம்.

ஒரு முறை இவன் கொடுக்கும் வேலையை செய்ய முடியாமல் சுந்தரிடமே, "யார் ண்ணே நீ? பாக்க ரொம்ப நல்லவன் மாதிரி இருந்த ஆனா பழக பழக இப்டி மிலிட்டரி மாதிரி விறைப்பா சுத்துறியே" என்ற அவள் கேள்விக்கு நக்கலாய் அவளை பார்த்தவன் பதில் பேசாமல் வேலையை தொடர்ந்தான். 

"சிரிக்கவே தெரியாத காட்ஜில்லா தலையன மதிச்சு பேசுனா இப்டி தான் அசிங்க பட்டு நிக்கணும்" என ஷெர்லினும் அவள் பங்கிற்கு தங்களுக்கு முதுகு கட்டிக்கொண்டு செல்லும் சுந்தரை கருவியபடி அவன் கூறிய இடத்தை அளக்க துவங்கினாள்.

"ஏன்லா இவன அன்னைக்கு நடு ரோட்டுல வச்சு எதுவும் பேசாம வந்துருக்கணுமோ?" - வைஷ்ணவி.

"அத தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்... பேச்சோட நிருத்திருக்க கூடாது மீனா ஒரசுர மாதிரி வாய தார் ரோட்டுல வச்சு ஒரசிருந்தா இன்னைக்கு இவ்ளோ வேலை வாங்க மாட்டான்ல?" கருவிக்கொண்டே வேலையில் இருந்தாள் ஷெர்லின்.

தோழியின் குமுறலை செவி சாய்த்தாலும் வைஷ்ணவிக்கு கண்கள் மொத்தமும் வாயிலை நோக்கியே இருந்தது.

"நம்மளையும் ஒரு என்ஜினீயரா மதிச்சு அவர் வேலை போட்டு குடுத்துருக்கார் அவரை இப்டி எல்லாம் சொல்லலாமா ஷெர்லின்?" - வைஷ்ணவி 

"அவனுக்கு முதல வேலை தெரியுமான்னு கேளு? ஓரமா நின்னு வேடிக்கை தான் பாக்குறான் தவற இளநி தலையன் ஒரு வேலையும் பாக்குறது இல்ல" - ஷெர்லின் 

டிங் டாங் காதல்Where stories live. Discover now