டிங் டாங் - 19

495 30 9
                                    


"வேணாம் ம்மா..." என்றான் யோசிக்காமல்.

படபடக்கும் இதயத்துடன் மஹாலக்ஷ்மி மகனின் முகத்தை பார்த்தார், "ஏன் ப்பா நல்ல பொண்ணு தானே?" 

"நல்ல பொண்ணு தான் ம்மா... ஆனா நான் அந்த பொண்ணுகிட்ட வார்த்தையை விட்டுட்டுட்டேன்" என திணறினான். 

அன்று அவளிடம் பேசியதை எல்லாம் கூறினான், ஆனால் அவளுக்கு தன் மேல் விருப்பம் இருந்ததை பற்றி தான் வார்த்தை விட்டதை தெரியாமல் கூட வெளியிடவில்லை. 

"என்ன பண்ணி வச்சிருக்க கார்த்தி? இப்படியா ஒரு பொண்ணுகிட்ட பேசுறது? மரியாதையை எல்லாம் சொல்லி தானே உன்ன நாங்க வளத்தோம்? ஏற்கனவே வீட்டுக்கு எதுக்க பொண்ண எடுத்திருக்க கார்த்தி லவ் பண்ணானானு யாரும் கேட்டா என்ன சொல்றது தெரியாம முழிச்சிட்டு இருக்கோம். இதுல நீ புது பிரச்சனைய இழுத்து வச்சிருக்க கார்த்தி" அன்னை கண்ணில் தெரிந்த அதிருப்த்தி அவனை குறுக செய்தது. 

"எப்பவும் வீட்டுக்கு வர்ற பொண்ணு ரெண்டு நாளா வராதப்பவே நான் யோசிச்சிருக்கணும். என் மகன் மேல இருந்த நம்பிக்கைல தப்பா எதையும் யோசிக்கல" என்றார் மேலும். 

"குறும்பு இருக்குற அதே அளவு தெளிவும் வைஷ்ணவிகிட்ட இருக்கும் கார்த்தி. அந்த பொண்ணு சொல்றத அப்டியே கேட்டு செய்ற அளவு நானும் உன்னோட அப்பாவும் புத்தி கெட்டு போய்டல. ஒரு தடவைக்கு நூறு தடவ யோசிச்சு தான் உன்கிட்ட உண்மைய மறைச்சது, அதுக்காக எங்களையும் உன்னோட வாழ்க்கைல வரவே வேணாம்னு சொல்லிடுவியா?" 

உஷ்ண பார்வை மகனுக்கு தந்தவர் எழுந்து செல்ல, அவர் கை பிடித்து, "சரி மா" என்றான் அன்னை கண் பார்க்காமல். 

புருவத்தை தூக்கியவர், "எதுக்கு சரி? உன் வாழ்க்கைல நாங்க வர கூடாதுன்னா?" 

"ம்மா" கார்த்தியின் முகம் மேலும் வாடியது, "உங்க விருப்பம் எதுவோ அதையே பண்ணுங்க" 

முழு மனதோடு தான் சம்மதம் கூறுகிறானா என்ற சந்தேகம் வர, "இங்க பாரு ப்பா... காலம் எல்லாம் ஒண்ணா சேர்ந்தது வாழ போறது நீயும் அந்த பொண்ணும் தான். நீ பேசுன வார்த்தை தந்த குற்ற உணர்ச்சில சம்மதிக்கிறதா இருந்தா கண்டிப்பா வேணாம் தம்பி. பரிதாபத்துலையோ கடமைக்காவோ உருவாகிற உறவு என்னைக்கும் நீடிக்காது" கண்டிப்புடன் கூறினார். 

டிங் டாங் காதல்Where stories live. Discover now