டிங் டாங் - 11

360 27 3
                                    


மகனின் செய்தியை கேட்டு விறுவிறுவென கணவன் முன் வந்து நின்றார் விழிகளில் பரிதவிப்புடன். பின்னாலே வற்றிய சிரிப்போடு வந்த மகனை பார்த்ததும் மனைவியின் கலகத்திற்கு காரணம் புரிந்து. 

"என்னடா சொன்ன உங்கம்மாட்ட?" முறைத்தார் சுப்பிரமணி. 

மனைவி என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம். அதிகம் பேசாதவர் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட தன்னிடம் கலங்கிய விழிகளுடன் வந்து நின்றால் எதிரில் எவர் நின்றாலும் மனைவி பற்றி மட்டுமே யோசித்து விடும் அவர் எண்ணம். 

அது அன்னையாக இருந்தாலும் சரி, எவராக இருந்தாலும் சரி. தன்னை மட்டுமே உலகமாய் வந்து நிற்பவரை சிறிதும் கலங்கடிக்க கூடாதென்று அவர் எண்ணம். இப்பொழுது மகனை விட்டுவிடுவாரா என்ன?

"இந்த ஒர்க் முடியவும் ஆறு மாசம் ஆகும் ப்பா. கொஞ்ச நாள் மட்டும் ஒர்க் பண்ண எந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க. அதான் பாரின் போகலாம்னு யோசிச்சேன்" 

"என்ன கார்த்தி பேசுற? உன்ன விட்டுட்டு நாங்க இருந்ததே இல்ல ப்பா. ஆறு மாசம் கண் மூடி முழிக்கிறதுக்குள்ள ஓடிடும். இதுக்காக நீ ஆறு மாசம் எங்கையாவது போய் கஷ்டப்படணுமா?" 

இதுவரை அவனை பார்க்காமல் ஒரு மாதம் கூட மஹாலக்ஷ்மி தாக்கு பிடித்ததில்லை. ஆறு மாதம் வெளிநாடு சென்றால் மொத்தமும் அவனை பார்க்க முடியாதே என்ற வருத்தத்தில் தான் கணவனிடம் வந்து நின்றார். 

"புரியுது மா ஆனா ஆறே ஆறு மாசம் தான் மா. வேகமா வந்துடுவேன்" 

"ஏன்யா... இந்த கெழவியே எப்போ எப்போ-னு இருக்கேன். இதுல நீரும் கெளம்பிட்டா என்ற நிலைமையை பத்தி யோசிச்சுப்போட்டு முடிவெடுக்க வேண்டாமா?" கண்ணீரை வடித்துக்கொண்டே பேரனிடம் கேள்விகேட்டார் சேர்மத்தாய். 

"என்ன பட்டி இது... இப்டி எல்லாம் பேசுறீங்க? உங்களுக்கு ஆயிசு கெட்டி. ஏன் கவலை பட்டு ஒடம்ப கெடுக்குரிக?" 

டிங் டாங் காதல்Where stories live. Discover now