டிங் டாங் - 16

351 28 4
                                    

சென்றிருந்தது ஒரு வாரம் கார்த்தி சவூதி சென்று. கடந்த ஒரு மாதமாக குற்றாலத்தில் மழை அதிகம் இருப்பதால் கட்டிட வேலையும் பாதியிலேயே நிற்க, வைஷ்ணவிக்கு தான் கொண்டாட்டமாக போனது. 

வேலை செய்ய தேவையில்லை என்று. ஷெர்லின், வைஷ்ணவி இந்த விடுமுறையை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டனர். ஒரு நாள் வைஷ்ணவி வீடு, ஒரு நாள் ஷெர்லின் இல்லம் என மாறி மாறி படம் பார்க்க, கேலி செய்ய என நாட்கள் ஆசையாகவும் அமர்த்தலாகவும் சென்றது. 

மஹாலக்ஷ்மி தான் வருத்தத்தில் இருந்தார், "அவன் சீசன் வர்றதுக்குள்ள எப்படியாவது வேலைய முடிச்சிடணும்னு சொன்னான் வைஷு இப்டி ஒரு மாசம் வேலை நின்னுபோச்சே. அவன் ரொம்ப வருபதப்படுறான் டா" 

"த்தை இயற்கையை யாரால நிறுத்த முடியும் சொல்லுங்க. எல்லாமே நல்லதுக்கு தான். பேஸ்மென்ட் போட்டுருக்கோம். மழை நல்லா பெஞ்சா பில்டிங் ஸ்ட்ரோங் தானே ஆகும்?" 

"அதுக்குன்னு ரெண்டு வாரமாவா?" முகம் வாடி கேட்டார். 

"என்ன இப்போ உங்களுக்கு போர் அடிக்கிதா? எங்க வீட்டுக்கு குடும்பத்தோட பொண்ணு கேக்க வாங்க. வாத்தி ஏதோ பையன பத்தி ரொம்ப தீவிரமா விசாரிச்சிட்டு இருக்கார்" 

"வைஷு நிஜமாவா?" அதிர்ச்சியில் வாய் பிளந்தார் மாமியார். 

"ஆமா கோவில்பட்டில இருக்காங்களாம் பையன் அம்மா அப்பா. அவன் சென்னைல ஒர்க் பன்றானாம்" தன்னை இந்த செய்தி எல்லாம் சுத்தமாக பாதிக்கவில்லை என்று திடமாக நின்றாள் வைஷ்ணவி. 

"என்னடா இப்டி சொல்ற?" அவளுக்கும் சேர்த்து அவர் ஷாக் ஆனார். 

"இதுல சொல்ல இன்னும் என்ன இருக்கு த்தை. என்ன நடந்தாலும் சரி, யார் என்ன சொன்னாலும் நான் உங்க பையன மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்குவேன். யார் என்ன சொன்னாலும் என்னோட முடிவு என்னைக்கும் மாறாது. உங்க வீட்டுல நீங்க எப்போ பேச போறீங்க?" 

கார்த்தி வீட்டின் சமயலறையில் திண்டில் அமர்ந்து தோரணையாக மாமியாரிடம் மல்லுக்கு நின்றாள் அந்த ரவுடி. 

டிங் டாங் காதல்Where stories live. Discover now