எபிலாக்

624 35 30
                                    

"வைஷ்ணவி மா எந்திரிடா" மஹாலக்ஷ்மியின் குரல் கேட்டு படுக்கையின் அருகினில் கை வைத்து பார்த்த வைஷ்ணவிக்கு அப்பொழுது தான் இந்த நாளின் நிகழ்வே நினைவிற்கு வந்தது. இன்று சித்தார்த் சுபத்ராவின் திருமணம். 

இரண்டு வருடங்களில் பார்வையாலே சித்தார்த்தின் மனதை மொத்தமாய் அவள் பக்கம் சுபத்ரா ஈர்த்துவிட, அவர்களை கண்டுகொண்ட வைஷ்ணவி கணவனிடம் கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிடலாம் என வந்து நின்றாள். 

கார்த்தியோ, "வேணாம் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் டா. ஆசிலேஷன்ல இல்லாம ஸ்டெடியா நிக்கட்டும் நானே அப்பாகிட்ட பேசுறேன்" என ஒரு வருடத்தை கிடத்திவிட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் வீட்டினரிடம் பேசி திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளான். 

கண்களை கசக்கி அத்தையை பார்க்க அவரும் கிளம்பியிருந்தார். 

"கார்த்திக்" தலையணையை எடுத்து நெஞ்சோடு கட்டிக்கொண்டு அழைத்தாள் மனைவி அவன் சத்தமே இல்லை. குளியலறையை பார்க்க அதுவும் திறந்திருந்தது. 

மணியை பார்க்க மணி ஆரை தாண்டியிருந்தது. பதறியடித்து எழுந்தவள், "கெழவி கத்துமே" என மட மடவென குளித்து புதிதாக எடுத்த பட்டு புடவையை உடுத்தி அவசரமாக கீழே வந்தாள். வீட்டில் சேர்மத்தாயை தவிர வேறு எவரும் இல்லை.

"பாட்டி என்ன யாரையும் காணல?" 

எதுவும் தெரியாதது போல் கேட்ட பேத்தியை முறைத்தவர், "ஒரு பொம்பள புள்ள, வீட்டோட மருமக இப்படியா வீட்டுல கல்யாணம் நடக்குறப்ப இருப்பாங்க? மணி இப்பயே ஏழாச்சு, இந்நேரம் உன்ர மாமியாரோட சேர்ந்து வர்ற சொந்தத்த எல்லாம் வாசல்ல நின்னு வரவேற்கணும், அத விட்டுட்டு தூக்கம் என்னவாம் தூக்கம் அம்மணிக்கு?" எதுவும் பேசாமல் அமைதியாக சென்று சமயலறையினுள் நின்றுகொண்டாள் வைஷ்ணவி.

சேர்மத்தாய் வைஷ்ணவியை மனதார திட்டிவிட்டு, "என்ற பேரனுக்கு போன் போட்டு வர சொல்லு" என ஆணையிட்ட நொடியே வாசலில் அவர்கள் வாகனம் வந்து நின்றது. 

டிங் டாங் காதல்Where stories live. Discover now