டிங் டாங் - 21

464 31 6
                                    


"அத்தை..." வைஷ்ணவி வீட்டு வாசலில் நின்று கூவிக்கொண்டிருந்தான் வெள்ளைச்சாமி. வைஷ்ணவி வீட்டின் பின் தெருவில் இருப்பவன். வைஷ்ணவியை விட இரண்டு வயது இளையவன். 

"இருடா நாய்க்கு சாப்பாடு வச்சிட்டு வர்றேன்" மஹேஸ்வரி தன்னுடைய வேளையில் கவனமாய் இருந்தார். 

அவனுக்கோ கடுப்பு, "அந்த நாய் தான் உங்களுக்கு என்ன விட பெருசா போச்சா?" 

"ஏண்டா உன் கூட எதுக்குடா என் தங்க பிள்ளைய கம்பேர் பண்ற?" 

"நீங்க என் மேல பாசமா இருப்பிங்க-னு இத்தனை நாள் நம்புனேன் ஆனா இந்த குடும்பத்துல இருக்க எல்லாருமே என்ன ஏமாத்த தான் செய்ரிங்கல்ல?" மஹேஸ்வரியிடம் சண்டைக்கு சென்றான் வெள்ளைச்சாமி. 

செய்த உணவு அனைத்தையும் நாய்க்கு வைத்து அவனை பார்த்தார் மஹேஸ்வரி சிரிப்போடு, "நேத்து தான்டா அவளுக்கு கல்யாணம் முடிவாச்சு, பூ வைக்க வீட்டுக்கு சொல்லாமலா இருக்க போறேன்? சரி அவ மேல தான் இருக்கா போய் பேசு. நான் காபி போட்டு கொண்டு வர்றேன்" 

வீட்டிற்குள் மஹேஸ்வரி சென்றதும் சோகமாக படி ஏறி வைஷ்ணவியை பார்க்க சென்றான். அவளோ வெளியில் இருந்த ஊஞ்சலில் தான் அமர்ந்திருந்தாள், வெள்ளைச்சாமியை பார்த்ததும் தான் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தது கூட மறந்து போனது. ஒரு வாரம் கல்லூரியிலிருந்து டூர் ஒன்று சென்றவன் வந்தது இன்று காலை தான், 

"டேய் வைட்டு(white) எப்படா வந்த?" என்றாள் ஆச்சிரியமாக. 

"வைட் மனசு இருக்குறவன ரத்தம் வர அளவு கத்தியால் நெஞ்சுலையே குத்திடல வைஷ்ணவி?" விட்டெதெரியாக பேசினான். 

"என்னடா வைட்டு இப்டி எல்லாம் பேசுற? நான் உன்ன குத்துனேனா? அதுவும் நெஜுல?" அதிர்ச்சியடைந்து போல் நடித்தாள். 

"எதுவுமே தெரியாத மாதிரி நடிக்காத வைஷ்ணவி, உன்னையே நம்பிட்டு இருந்த என்ன ஏமாத்திட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறியா? என் மனசு துடிக்கிது... இங்க பாரு" தன்னுடைய நெஞ்சை கை காட்டி சொன்னான். 

டிங் டாங் காதல்Where stories live. Discover now