1 ருத்ரன்

5.2K 79 15
                                    

1 ருத்ரன்

மனநல மருத்துவமனை

அந்த மனநல மருத்துவமனையின், மூத்த மனநல மருத்துவரான கங்காதரனுக்கு முன்னால், கலங்கிய கண்களுடன் நின்றிருந்தாள் துர்கா. அவளை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தான் அவளது கணவன் பரமேஸ்வரன்.

"தைரியமா இருங்க மிஸஸ் பரமேஸ்வரன். நீங்க ருத்ரனுடைய உண்மை நிலைமையை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அவர் இந்த அளவுக்காவது தேறி வந்ததை நினைச்சு சந்தோஷ படுங்க" என்றார் ஐம்பத்தி ஐந்து வயதை கடந்து விட்டிருந்த கங்காதரன்.

"அவனால முழுமையா குணமாகவே முடியாதா டாக்டர்?" என்றாள் ருத்ரனின் அக்காவான துர்கா.

"அந்த கேள்விக்கு என்கிட்ட பதில் இல்ல. அது முழுக்க முழுக்க ருத்ரனை மட்டுமே பொருத்த விஷயம். தான் குணமாகணும்னு அவர் நினைச்சா மட்டும் தான் அவரால குணமாக முடியும்"

"அதுக்கு நம்ம எதுவுமே செய்ய முடியாதா டாக்டர்?" என்றான் பரமேஸ்வரன்.

"அந்த பொண்ண உங்களால அவருக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்த முடியுமா?"

பேச்சிழந்து நின்றான் பரமேஸ்வரன். அந்த மருத்துவருக்கு தெரியும், நிச்சயம் அவனால் பதில் அளிக்க முடியாது என்று.

"அந்தப் பொண்ணு இருந்தா நிச்சயமா நம்ம அவரை முழுமையாக குணப்படுத்த முடியும். ஆனா இப்போ, நம்மால எதுவுமே செய்ய முடியாது. அவருக்கு முன்னாடி அந்த பொண்ணை பத்தி எதுவும் பேசாதீங்க. அவளை ஞாபகப்படுத்துற எந்த பொருளையும் அவர் கண் முன்னாடி வைக்காதீங்க. அவள் சம்பந்தமான எல்லாத்தையும் தூர தூக்கி போடுங்க"

"சரிங்க டாக்டர்" என்றான் பரமேஸ்வரன்.

"அவர்கிட்ட ரொம்ப நார்மலா இருக்க பாருங்க. தனக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு அவருக்கு தோனவே கூடாது"

சரி என்று தலையசைத்தார்கள்.

"இந்த ஹாஸ்பிடலுக்கு நீங்க கொடுக்க வேண்டிய காம்பன்சேஷனை கொடுக்க மறந்துடாதீங்க"

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now