46 முன்னுரிமை

818 58 7
                                    

46 முன்னுரிமை

சக்தியுடன் தன் இல்லம் வந்து சேர்ந்தான் ருத்ரன். அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள் சக்தி. ருத்ரன் அழைப்பு மணியை அழுத்த, கதவை திறந்த துர்கா, தன் தம்பியை பார்த்தவுடன் கண்கலங்கினாள். தவிப்புடன் அவனை அணைத்துக் கொண்டாள்.

"அக்கா ப்ளீஸ் அழுகையை நிறுத்துங்க. இல்லனா, நான் மறுபடியும்  ஓடிப் போயிடுவேன். என்கிட்ட அதுக்கும் பிளான் இருக்கு" என்றான் சீரியஸாக.

அவனை பட்டென்று ஒரு அடி போட்ட துர்கா, சக்தியை வாஞ்சையுடன் தழுவிக் கொண்டாள். மற்றவர்களும் அவர்களை சூழ்ந்து கொண்டு தங்கள் உணர்வுகளை கொட்டித் தீர்த்தார்கள். அங்கிருந்து செல்ல ருத்ரன் முயன்ற போது,

"இப்போ நீ எங்க போற ருத்து?" என்றாள் துர்கா.

"வேற எங்க போவேன்? என்னோட ரூமுக்கு தான்"

"இவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்க... எங்க கூட கொஞ்ச நேரம் இருக்கலாம் இல்ல?"

"உங்க கூட தானே கா இருக்க போறேன்?"

"நான் அதைப்பத்தி சொல்லல. எங்க கூட உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசு"

"நான் இங்க வந்திருக்கவே கூடாது" முணுமுணுத்தான் ருத்ரன்.

"எங்க மேல உனக்கு பாசமே இல்லையா?" என்றாள் முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு.

அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த சக்தியை நோக்கி,

"இதுக்காகத் தான் நான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன்" என்றான் ருத்ரன்.

"நீ ரொம்ப மாறிட்ட ருத்து"

"அக்கா நான் ரொம்ப தூரம் வண்டி ஓட்டிக்கிட்டு வந்திருக்கேன். தயவுசெய்து என்னை ரெஸ்ட் எடுக்கவிடுங்க"

அவன் அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவனை அமருமாறு சைகை செய்தாள் சக்தி. பெருமூச்சு விட்டபடி அமர்ந்து கொண்டான் ருத்ரன். அவளும் புன்னகையுடன் அவனுடன் அமர்ந்து கொண்டாள். அதை பார்த்த சித்தி அபிராமியும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now